விராத் கோலிய பாத்தா அப்டி தெரியுது போல முகம்மது யூசப்புக்கு 1

Cricket, Virat Kohli, India, Sri Lanka

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் முகம்மது யூசுப் இந்திய அணி கேப்டன் விராத் கோலியை பற்றி தற்போது தனது கருத்தை பதிவு செய்துள்ளார். தற்போது உள்ள வீரர்களில் விராத் கோலி மிகச்சிறந்த வீரர் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

யூசுப் யுகானா முன்னாள் பாகிஸ்தான் பேட்ஸ்மேனான அவர், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் விராத் கோலியை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,

“நாங்கள் அந்த காலத்தில் வைத்து விளையாடிய தரம், தற்போது உள்ள கிரிக்கெட்டின் தரத்திற்கு எப்போதும் ஈடாகாது. நாங்கள் விளையாடிய தரம் மேம்பட்டதாக இருந்தது. விராத் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர், அவரது ஆட்டமும், ஷாட்களை தேர்வு செய்து ஆடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் எப்போதும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், விவிஎஸ் லட்சுமணன் போன்ற வீரர்களுக்கு ஈடானவர் அல்ல, அவர்கள் ஆடிய விதமும் வேறு அதற்கு அவர்கள் பயணித்த பாதையும் வேறு” என விராத் பற்றிய தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 

 ” பலர் எனது இந்த கருத்தை ஏற்காமல் போகலாம், ஆனால் நீங்கள் ஒரு ஒப்பீடு செய்து பாருங்கள் அப்போதைய பவுலர்களுக்கும் இப்போது உள்ள பவுளர்களின்  தரத்திற்கும் அனைவருக்கும் விளக்கம் தெரியும், அப்போது ஆஸ்திரேலியாவில் க்ளென் மெக்ராத், ஷேன் வார்ன் போன்ற தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இருந்தனர், ஆனால் தற்போது மெக்ராத் போன்ற வீரர் ஒருவர் கூட அந்த அணியில் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அதே போல தான் இந்தியாவும் அனில்  கும்ளே, ஜவகல் போன்ற சிறந்த வீரர்கள் தற்போது உள்ள இந்திய அணி வீரர்களில் ஒருவர் கூட இல்லை. இலங்கையும் முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ் போன்ற வீரர்களுக்கு சொந்தமான அணியாக இருந்து வந்தது. தற்போது உள்ள வீரர்களிடத்தில் அந்த தரம் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது ” என தெரிவித்தார். 

விராத் கோலிய பாத்தா அப்டி தெரியுது போல முகம்மது யூசப்புக்கு 2

ஒரு புறம் இருந்து பார்த்தால் யூசுப் கூறுவது சரி என அனைவருக்கும் தோன்றும், ஆனால் கேப்டன் பொருப்பு கைக்கு வந்த பின்னர் விராத் கோலி செயல் பட்டு வருகிறார், அதன் பின்னர் தான் விராத் கோலி 4 இரட்டை சதங்கள் விளாசினார்.

அதே போல பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் கேப்டன்சிப்பிலும் முத்திரை பதித்து வருகிறார். இலங்கை மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 22 வருடங்கள் கழித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தது விராத் கோலியின் கேப்டன்சிப்பே. இந்த சாதனையை இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனியினால் கூட படைக்க இயலவில்லை.

விராத் கோலிய பாத்தா அப்டி தெரியுது போல முகம்மது யூசப்புக்கு 3

ஆனால் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் மற்றும் அணியின் தலைவர் இரண்டையும் சரியாக ஒரு சேர கவனித்துக்கொள்ள முடியாமல் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கையில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. இரண்டாவது ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொலும்புவில் நடைபெறும். இந்த தொடரில் வெல்லம் பட்சத்தில் இலங்கை மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை படைப்பார் விராத் கோலி. விராத் கோலிய பாத்தா அப்டி தெரியுது போல முகம்மது யூசப்புக்கு 4

மற்றும் விராத் கோலி ஒருவர் மட்டுமே அனைத்து விதமான போட்டியிலும் சராசரி 50+ வைத்து விளையாடி வருகிறார். விராத் கோலியை போன்ற தரம் வாய்ந்த மற்ற வீரர்களான ஸ்டீவன் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியவர்களில் ஒருவர் கூட கோலியின் சாதனைகளை நெருங்க முடியாது என்பது நிதர்சனம். இம்மூவரும் கோலியை போன்று தத்தம் அணிகளை வழிநடத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் வெவ்வேறு காலகட்டங்களில் விளையாடிய தரம் வாய்ந்த இரு வீரர்களை ஒப்பிட்டு தரம் காண்பது ஏற்க்கத்தக்கதள்ள.

Leave a comment

Your email address will not be published.