வீடியோ; விராட் கோஹ்லியை வித்யாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாற்றும் அனுஷ்கா ஷர்மா
கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுக்க 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தருணத்தில் பொதுமக்கள் பிரபலங்கள் என பலரும் வீட்டில் இருந்த படியே விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
தற்போது அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கக்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில், அனுஷ்கா ஷர்மா விராட் கோலிக்கு சிகையலங்காரம் செய்கிறார். அந்த வீடியோவில் விராட் கோலி “இந்த வீடியோவை உங்களுக்காக பதிவிடுகிறோம், என் மனைவி கிச்சன் கத்திரியை பயன்படுத்தி எனக்கு சிகையலங்காரம் செய்கிறார்..” என பேசியிருக்கிறார்.
View this post on InstagramMeanwhile, in quarantine.. ??♂??♀
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
தற்போது அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதற்கு முன்பாக, ஷிகர் தவான் தனது வீட்டில் துணி துவைக்கும் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார்.