கேப்டன்ஸியில் பல நுணுக்கங்களை வைத்திருக்கிறார் கோஹ்லி: ஆஸ்திரேலியா அணி ஜாம்பவான் 1

கேப்டன் பொறுப்பு மற்றும் பேட்டிங்கில் விராத் கோஹ்லி தனக்கென தனி நுணுக்கங்களை கொண்டிருக்கிறார் என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் கூறுவது, “பெரிய சகாப்த வீரர்” விராட் கோஹ்லி, உலகின் தற்போதைய கிரிக்கெட்டர்களில் சிறந்த பேட்டிங் நுட்பத்தை கொண்டிருக்கிறார். பிரையன் லாரா மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வரலாற்று சிறப்புமிக்க வீரர்களுடன் ஒப்பிடுகையில், கோஹ்லி ஒரு சிறந்த பேட்ஸ்மேனுக்கான அனைத்து பண்புகளையும் வெளிப்படுத்தி வருகிறார் என்றார் ஸ்டீவ் வாக்.

கேப்டன்ஸியில் பல நுணுக்கங்களை வைத்திருக்கிறார் கோஹ்லி: ஆஸ்திரேலியா அணி ஜாம்பவான் 2
India captain Virat Kohli during the nets session at Lord’s, London. (Photo by Tim Goode/PA Images via Getty Images)

67 டெஸ்ட் போட்டிகளில் 54.28 சராசரியில் கோலி 5754 ரன்கள் எடுத்துள்ளார். 211 ஒருநாள் போட்டிகளில் 58.2 சரசரியுடன்  9779 ரன்களையும் மற்றும் 62 டி20 போட்டிகளில் 48.8 சாரசரியுடனும் 2102 ரன்களை எடுத்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸிலும் கோலி 149 மற்றும் 51 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். இந்த இடத்தை எட்டிய ஏழாவது இந்தியர் ஆவார். 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தை பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

கேப்டன்ஸியில் பல நுணுக்கங்களை வைத்திருக்கிறார் கோஹ்லி: ஆஸ்திரேலியா அணி ஜாம்பவான் 3
India’s Virat Kohli celebrates reaching fifty runs during play on the fourth day of the first Test cricket match between England and India at Edgbaston in Birmingham, central England on August 4, 2018. (Photo by ADRIAN DENNIS / AFP) (Photo credit should read ADRIAN DENNIS/AFP/Getty Images)

“அவர் (கோலி) அனைத்து மைதானங்களிலும் ஆடும் அளவிற்கு திறமையை பெற்றுள்ளார், உலக கிரிக்கெட்டில் இது போன்ற சிறந்த திறனை இவர் ஒருவர் மட்டுமே பெற்றுள்ளதாக நான் நினைக்கிறேன்,” என்று வாக் கூறினார். 
“அவர் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இருவரும் சிறந்த நுட்பங்களை கொண்டுள்ளனர், மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடாததால் கோலி தனித்து தெரிகிறார்”.

அவர் பிரையன் லாரா, டெண்டுல்கர், ரிச்சர்ட்ஸ் மற்றும் ஜாவேத் மியாண்டட் மற்றும் அனைத்து பெரிய பேட்ஸ்மேன்கள் போன்ற பெரிய ஜாம்பவான்கள் போல திகழ்கிறார். 

கேப்டன்ஸியில் பல நுணுக்கங்களை வைத்திருக்கிறார் கோஹ்லி: ஆஸ்திரேலியா அணி ஜாம்பவான் 4
BIRMINGHAM, ENGLAND – AUGUST 03: England bowler James Anderson looks on as India batsman Virat Kohli picks up some runs during day 3 of the First Specsavers Test Match at Edgbaston on August 3, 2018 in Birmingham, England. (Photo by Stu Forster/Getty Images)

அவர் மிகப்பெரிய சந்தர்ப்பத்தை விரும்புகிறார் மேலும் அதை பயன்படுத்தி சிறப்பாக கிரிக்கெட்டை வெளிப்படுத்துகிறார்.” என்று அவர் கூறினார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *