இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது வெற்றிகளையும் தோல்விகளையும் மிக அழகாகக் கையாள்கிறார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகிறார்.
சமீபமாக நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டி20 போட்டியிலும் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது குழந்தையை பார்ப்பதற்காக முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கு எடுத்துவிட்டு இந்தியா திரும்பினார் அவருக்கு பதில் இந்திய அணியை அஜிங்கிய ரஹானே திறம்பட வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகமான சாதனைகளை படைத்துள்ளார் மேலும் பல சாதனைகளை படைக்க உள்ளார்.இவர் அனைத்து விதமான போட்டிகளிலும் எந்த சூழ்நிலையும் சிறப்பாக செயல்படும் வீரர் என்று பல கிரிக்கெட் வல்லுனர்களும் இவரை பாராட்டியுள்ளனர்.
இந்திய அணிக்கு 6 ஆண்டுகள் தலைமை வகிக்கும் விராட் கோலி கிரிக்கெட் போட்டியின் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்வதில் வல்லவர் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார், மேலும் இவர் எப்பொழுதும் புதுப்புது விடயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ளவர். தற்போது தந்தையாக மாறி இருக்கும் விராட் கோலி தனது வாழ்க்கையின் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது.

மேலும் ரவிசாஸ்திரி கூறியதாவது விராட் கோலி அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் அழகாக கையாளுகிறார் இவர் தனது வெற்றியை தோல்வியை சிறப்பாக அணுகுகிறார், இவர் சூழலுக்கு ஏற்றவாறு சிறந்த முடிவு எடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார் என்று விராட் கோலியை பாராட்டியுள்ளார்