இந்த இந்திய வீரர் தான் உலகின் தலைசிறந்த வீரர்; விண்டீஸ் வீரர் புகழாரம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஷிவ்நரைன் சந்தர்பால், விராட் கோலிதான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள். இதில் விராட் கோலி மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மூன்றிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.

இந்த இந்திய வீரர் தான் உலகின் தலைசிறந்த வீரர்; விண்டீஸ் வீரர் புகழாரம் !! 1

இந்நிலையில் விராட் கோலிதான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சந்தர்பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சந்தர்பால் கூறுகையில் ‘‘விராட் கோலிதான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய ஆட்டத்தின் எல்லா அம்சங்களிலும் கடினமாக பயிற்சி மேற்கொண்டிக்கிறார். அதன் முடிவை அவரது ஆட்டம் வெளிப்படுத்துகிறது.

அவர் உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்துகிறார். அதுபோல் கிரிக்கெட் திறனை வளர்க்கும் வகையில் அதிக பயிற்சி மேற்கொள்கிறார். கடின உழைப்பின் மீது அவர் கவனம் செலுத்தி, எப்போதுமே சிறப்பாக விளையாட வேண்டும் என விரும்பும் வீரர்களில் அவர் ஒருவர் என்பதை நம்மால் பார்க்க முடியும்.

இந்த இந்திய வீரர் தான் உலகின் தலைசிறந்த வீரர்; விண்டீஸ் வீரர் புகழாரம் !! 2

நீண்ட காலத்திற்கு சிறந்த ஆட்டத்தை தொடர்வது எளிதான காரியம் அல்ல. அதற்காக அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். உங்களுடைய பயிற்சியின் மீது நீங்கள் கவனம் செலுத்தினால், அதன் ரிசல்ட் கண்டிப்பாக வெளிப்படும்” என்றார். • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை டஹெர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....