விராட் கோலியின் வெற்றியின் ரகசியம் இதுதான்: கண்டுபிடித்த ரஷித் கான் 1

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்களில் மட்டுமல்ல உலக அளவில் தற்போது ஒரு மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் யார் என்று கேட்டால் அது நிச்சயமாக ரஷித் கான என்றுதான் அனைவரும் கூறுவார்கள்.

அந்த அளவுக்கு அவருடைய ஆதிக்கம் சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாது அவ்வப்போது நடைபெற்று வரும் டி20 தொடர்களிலும் நாளுக்கு நாள் நம் கண் முன்னர் தெரிகிறது. அவரை எதிர்கொண்டு விளையாடுது நிறைய பேட்ஸ்மேன்கள் அச்சப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. இந்நிலையில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் வீரர்களான மகேந்திர சிங் தோனி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.

விராட் கோலி எப்பொழுதும் மன ரீதியாக விளையாடுவார்

விராட் கோலியை பற்றி பேசியுள்ள அவர், விராட் கோலிக்கு நான் பந்து வீச வரும்போது சற்று யோசித்து தான் பந்துவீச வருவேன். மிக நல்ல பந்துகளை வீசும் பொழுது, அவர் அந்தப் பந்துகளை நிதானமாக நிறுத்துவார். அதே சமயம் மோசமான பந்துகளை வீசும் பொழுது நமக்கு தகுந்த தண்டனையை அவர் தனது பேட்டின் மூலம் வழங்குவார்.

விராட் கோலியின் வெற்றியின் ரகசியம் இதுதான்: கண்டுபிடித்த ரஷித் கான் 2

மற்ற அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அன்றைய ஆட்டத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று முன்கூட்டியே கணித்து வைத்திருப்பார்கள். ஆனால் விராட் கோலி எப்பொழுதும் அவரது இயல்பான ஆட்டத்தை விளையாடுவார். மனரீதியாக எந்த வேளையில் எப்படி விளையாட வேண்டுமோ அப்படி விளையாடுவார் அதுவே அவருடைய பலம் என்று கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாட விருப்பம்

எனக்கு எப்பொழுதும் மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. மேலும் நான் அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். எனக்கு நிறைய அறிவுரைகளை அவர் வழங்கியிருக்கிறார். ஒரு சமயம் நான் அவரிடத்தில் பேசிய பொழுது, அவர் எனக்கு ஒரு அறிவுரை வழங்கினார்.

” நீ எப்பொழுதும் மைதானத்தில் ஃபீல்டிங் செய்யும் பொழுது தேவையில்லாத நேரங்களில் சறுக்கிக் கொண்டு பந்துகளை தடுத்து வருவதை நான் பார்க்கிறேன். நீ அப்படி செய்யக்கூடாது, உனது ரசிகர்கள் நீ நீண்டகாலம் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். தவறுதலாக சறுக்கி உனக்கு காயம் அடைந்து விட்டால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார். நான் இதை ரவீந்திர ஜடேஜா விடமும் நிறைய முறை கூறி இருக்கிறேன்” என்று தனக்கு அறிவுரை வழங்கியது ரஷித் கான் தற்பொழுது கூறியுள்ளார்.

விராட் கோலியின் வெற்றியின் ரகசியம் இதுதான்: கண்டுபிடித்த ரஷித் கான் 3

ரோகித் சர்மா டைமிங்கில் பேட்டிங் செய்யும் ஒரு கில்லாடி

ரோகித் சர்மா பற்றி கூறியுள்ள அவர், ஒருசில பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே ஒரு சில சிறப்பம்சம் இருக்கும். வந்து எவ்வளவு வேகத்தில் வந்தாலும் அவர்கள் நிதானமாக டைம் எடுத்து அந்த பந்தை சர்வ அலட்சியமாக அடிப்பார்கள்.

அதில் ஒரு சிறந்த வீரர் ரோகித் சர்மா, அவருக்கு எந்த வேகத்தில் பந்து வீசினாலும் அந்த பந்தை மிக நிதானமாக எந்த டைமிங்கில் அடிக்கவேண்டுமோ அந்த டைமிங்கில் தூக்கி அடிப்பார். பலமாக அடிப்பதை விட தன்னை நோக்கி வரும் பந்துகளை, டைமிங்கில் அதனுடைய வேகத்தில் எப்படி கையாண்டு அடிக்க வேண்டும் என்கிற யுக்தி ரோகித் சர்மாவுக்கு நன்கு தெரியும் என்று கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *