இந்திய டெஸ்ட் அணிக்கு நீதான் துவக்க வீரன்! இளம் வீரரிடம் போய் நேரடியாக சொன்ன விராட் கோலி! 1

இந்திய டெஸ்ட் அணிக்கு நீதான் துவக்க வீரன்! இளம் வீரரிடம் போய் நேரடியாக சொன்ன விராட் கோலி!

இந்திய அணி 2018 பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதுவரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதில்லை . அங்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன் முதலாக தொடரை வென்று இந்தியாவை பெருமைப்படுத்தியது.இந்திய டெஸ்ட் அணிக்கு நீதான் துவக்க வீரன்! இளம் வீரரிடம் போய் நேரடியாக சொன்ன விராட் கோலி! 2

ஆனால் இந்த தொடருக்கு இந்திய அணி செல்லும் முன்னர் அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. பல்வேறு வீரர்கள் கழட்டி விடப்பட்டனர். புதிய வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டனர். ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் என பல இளம் வீரர்கள் களம் இறங்கினார்கள். இப்படியிருக்கையில் அந்த இளம் வீரர்கள் அனைவருக்கும் ஒரு புதிய பொறுப்பை கொடுத்தார் விராட் கோலி. அப்படித்தான் இந்த தொடர் துவங்கும் முன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரியிடம் சென்று நீதான் இந்த முறை துவக்க வீரராக களமிறங்க போகிறாய் என்று கூறியுள்ளார்.இந்திய டெஸ்ட் அணிக்கு நீதான் துவக்க வீரன்! இளம் வீரரிடம் போய் நேரடியாக சொன்ன விராட் கோலி! 3

இதனை கேட்டாலும் ஹனுமா விஹாரி உடனடியாக… நான் தயாராக இருக்கிறேன் கேப்டன் என்று கூறியுள்ளார். உடனே விராட் கோலிக்கு இது பிடித்து போய்விட்டது. அவரது தன்னம்பிக்கை காரணமாக அவரை மிடில் ஆர்டரில் இறக்கிவிட்டார். அவரும் நன்றாக விளையாடினார் .Pat Cummins, Harsha Bhogle, Test Team of The Year 2019

ஏற்கனவே மிடில் ஆர்டர் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி வருபவர் இதன் காரணமாகத்தான் அவர் இந்திய அணியில் இடம் பிடித்தார். துவக்க வீரர்களாக தற்போது மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்த வீரர்கள் சொதப்பினால் மிடில் ஆர்டரில் களமிறங்கும் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *