இவர் டி-20 உலகக்கோப்பை போட்டியில் களமிறங்குவது உறுதி..விராட் கோலி ஹிண்ட்!! 1

நடராஜன் வருகிற டி-20 உலகக்கோப்பையில் களமிறங்குவார் என்று இந்திய அணி கேப்டன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 விதமான போட்டிகளில் விளையாடி வருகிறது அதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.

பின் ஆக்ரோஷமாக களமிறங்கி டி20 தொடரை 2 – 1 என வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணிக்கு பதிலடி கொடுத்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக தமிழக வீரர் நடராஜன் தான்.

இவர் டி-20 உலகக்கோப்பை போட்டியில் களமிறங்குவது உறுதி..விராட் கோலி ஹிண்ட்!! 2

இந்த டி-20 தொடரில் தமிழக வீரரான வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் மிகச்சிறப்பாக செயல்பட்டார், அவர் தனக்கு வாய்ப்பு கொடுத்த வாய்ப்பை வீணடிக்காமல் திறமையாக செயல்பட்டு பலரது வரவேற்ப்பை பெற்றுள்ளார்.

மூன்று போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்களை எடுத்து 83 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். இவரின் இந்த அபாரமான திறமை பல ஜாம்பவான்களை வியப்பில் ஆழ்த்தியது.

இவர் டி-20 உலகக்கோப்பை போட்டியில் களமிறங்குவது உறுதி..விராட் கோலி ஹிண்ட்!! 3

இந்திய அணியில் முகமது ஷமி,பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் நடராஜன் தனக்கு கிடைத்த வாய்ப்பை ஆரம்பத்திலேயே சிறப்பாக பயன்படுத்தி அசத்திவிட்டார். இதனால் இவருக்கு பின் வரும் தொடர்களில் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது என கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் என்று ரசிகர்களும் பலர் தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதுபற்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது நடராஜன் தன்னுடைய கடின உழைப்பால் இவ்வளவு தூரம் முன்னேறி உள்ளார்.

இவர் டி-20 உலகக்கோப்பை போட்டியில் களமிறங்குவது உறுதி..விராட் கோலி ஹிண்ட்!! 4

இவருடைய பந்துவீச்சு மிக சிறப்பாக உள்ளது இக்கட்டான நிலையில் கூட இவர் பொறுமையாகவும் சிறப்பாகவும் செயல்படுகிறார். இவருடைய கடின உழைப்பை பனிவும் இவரை இன்னும் பல சாதனைகளை படைக்க செய்யும் என்று நடராஜனை புகழ்ந்து கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது இடது கை பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் இது சர்வதேச டி-20 உலகக்கோப்பை போட்டியில் முக்கிய வீரராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

இவர் டி-20 உலகக்கோப்பை போட்டியில் களமிறங்குவது உறுதி..விராட் கோலி ஹிண்ட்!! 5

2021 நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை கண்டிப்பாக நடராஜன் பங்கேற்பார் என்று பலரும் தனது ஆதரவை நடராஜனுக்கு தெரிவித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *