இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இவரது தலைமையிலான அணிதான் மிகச் சிறந்த அணி சச்சினும் கங்குலியும் இல்லை தோனியும் இல்லை முன்னாள் வீரர் ஓபன் டாக்
இந்தியா கடந்த 1935 ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. அதன் பின்னர் 50 வருடங்கள் கழித்துதான் உலக கோப்பை தொடரை வென்றது. குறிப்பிடத்தக்கது. கபில்தேவ் தலைமையில் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரை வென்றது. அதன் பின்னர் 28 வருடங்கள் கழித்து இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் கோப்பை வெல்லபட்டது
அவர் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் ஒரு கேப்டனாக வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விராட் கோலி ஆக்ரோஷமான முறையில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். 2014ஆம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தி மீண்டும் இந்தியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு அழைத்துச் சென்றார் அவர்.
இவரது காலத்தில்தான் முதன் முதலில் இந்தியா ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கும், செமி பைனல் போட்டிக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் கங்குலியின் தலைமையை எடுத்துக்கொண்டால் இக்கட்டான சூழ்நிலையில் அணியை வழிநடத்தி 2003ம் ஆண்டு இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய வீரர் அனுஸ்மான் பேசியுள்ளார். அவர் கூறுகையில்…
என்னைக்கேட்டால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தான் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த அணியாக இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு, ஆல்ரவுண்டர் என அனைத்து திறமையும் இந்த அணியில் இருக்கிறது. இதுநாள் வரையில் இந்தியாவில் பெரிதாக வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. ஒரு காலத்தில் ரோஜர் பின்னி, கபில்தேவ் போன்ற வீரர்கள் இருந்து பந்துவீச்சாளர்கள் வெற்றி பெற்றுக் கொடுத்தனர். அதன் பின்னர் அது இல்லாமல் போனது தற்போது உள்ள வீரர்கள் முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், இசாந்த் சர்மா ஆகியோர் பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொள்கின்றனர் என்று கூறியுள்ளார் அனுஸ்மான் .