விராட் கோஹ்லியின் விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடியாததற்கு இது தான் காரணம்; இர்பான் பதான் சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பமனாக திகழ்ந்து வருவதன் ரகசியத்தை முன்னாள் வீரர் இர்பான் பதான் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரருமான விராட் கோஹ்லி விளையாடும் ஒவ்வொரு போட்டியில் நிச்சயம் பல முன்னாள் ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்த்து வருகிறார். அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் தற்பொழுது மூன்றாவது இடத்தில் இருக்கும் விராட் கோஹ்லி, இன்னும் 2 சதங்கள் அடித்தால், ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்திற்கு சென்றுவிடுவார்.
அனைத்து போட்டிகளிலும் சீராக ரன்களை குவிப்பதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி. அதற்கு காரணம், அவர் சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதுதான் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். இர்ஃபான் பதானுடனான உரையாடலில், விராட் கோலியின் ஸ்டிரைக்கை ரொடேட் செய்யும் திறமை, ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ், கெய்ல் போன்ற வீரர்களிடம் இல்லை. சிங்கிள்களை எடுத்து ஸ்டிரைக் ரொடேட் செய்து ஆடுவதுதான், ரோஹித், டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த வீரர்களிடமிருந்து கோலியை ஒரு அடி உயர்த்தி பிடிக்கிறது. அதுதான் அவர் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக திகழ்வதற்குமான காரணம் என்றும் கம்பீர் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த இர்ஃபான் பதான், கோலி சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதால் தான் அவரை எதிரணி பவுலர்களால் அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியவில்லை என்று தெரிவித்தார். கோலியின் மிகப்பெரிய பலமே அதுதான்.
“விராட் கோலி தொடர்ச்சியாக சிங்கிள் எடுத்துவிட்டு பவுலிங் முனைக்கு சென்றுவிடுவதால், அவருக்கு எதிரான திட்டத்தை வகுப்பது, எதிரணி பவுலர்களுக்கு கஷ்டமாகிறது. கோலி ஸ்பெஷலான வீரர். சிங்கிள் ரொடேட் செய்வது மட்டுமல்ல; அவரது ரிஸ்ட் ஒர்க்கும் அருமையாக இருக்கும். அதனால் தான் சிறப்பாக வீசப்பட்ட பந்தைக்கூட அவர் தேர்டுமேன் திசையில் அடித்துவிட்டு சிங்கிள் எடுக்கிறார்” என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார்.