ஆஸ்திரேலியா வெளியிட்ட சிறந்த அணிக்கே கோஹ்லி தான் கேப்டன் !! 1

ஆஸ்திரேலியா வெளியிட்ட சிறந்த அணிக்கே கோஹ்லி தான் கேப்டன்

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விளையாட்டுத் தொடர்பான எழுத்தாலர் ஜான் பைரிக். இவர் தி ஏஜ் மற்றும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் ஊடகங்களில் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து ஆகியவை பற்றி ஆழமாகவும் நகைச்சுவை ததும்பும் நடையிலும் கட்டுரைகள் பல எழுதி மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர் ஆவார்.

அவர் 2018-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்டில் அவர் எழுதிய பத்தியில் தேர்வு செய்த அணியில் ஒரேயொரு ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா வெளியிட்ட சிறந்த அணிக்கே கோஹ்லி தான் கேப்டன் !! 2

இந்த அணிக்கு விராட் கோலி கேப்டன், துணை கேப்டன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்.

இந்தியாவின் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா, இவரது அணியிலும் தொடக்க வீரராக இடம்பெற்றுள்ளார், பிரித்வி ஷா, விராட் கோலி, பும்ரா இந்திய அணியிலிருந்து இடம்பெற்றுள்ளனர். இலங்கையின் திமுத் கருணரத்னே, இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் 356 ரன்கள் எடுத்து 743 ரன்களை 46.43 என்ற சராசரியில் சேர்த்திருப்பதால் பிரித்வி ஷாவுடன் தொடக்க வீரர் இடத்தை இவரது சிறந்த 2018 அணியில் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா வெளியிட்ட சிறந்த அணிக்கே கோஹ்லி தான் கேப்டன் !! 3

இவரது அணியில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம், அசார் அலி போன்ற வீரர்களும் இல்லை, நடப்பு ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஒரு பேட்ஸ்மேன் கூட இடம்பெறவில்லை. பாகிஸ்தானின் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா 12வது வீரராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜான் பைரிக்கின் 2018-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி வருமாறு:

பிரித்வி ஷா, திமுத் கருண ரத்னே, கேன் வில்லியம்சன், விராட் கோலி, ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், நேதன் லயன், பும்ரா, ஜேம்ஸ் ஆண்டர்சன், ரபாடா., 12வது வீரர் யாசிர் ஷா.

அதே போல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் அணியின் கேப்டனாகவும் விராட் கோஹ்லியே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள சிறந்த அணி;

ரோஹித் சர்மா, ஜானி பாரிஸ்டோவ், ஜோ ரூட், விராட் கோஹ்லி (கேப்டன்), சிம்ரன் ஹெய்ட்மர், ஜாஸ் பட்லர், திஷாரா பெரேரா, ரசீத் கான், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *