இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் இடம் ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் ரோகித் சர்மா தான் மிகச் சிறந்த கேப்டன் என்று கூறி அதற்கான விளக்கத்தையும் தற்பொழுது அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா
2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மிக சிறப்பாக விளையாடி அந்த ஆண்டுக்காண மிகச்சிறந்த வீரர் விருதையும் கைப்பற்றி அந்த ஆண்டு டெக்கான் அணி கோப்பையை கைப்பற்ற தன்னுடைய மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கினார். அதன் மூலம் அவரது திறமையை கண்ட மும்பை அணி அவரை அதன் பின்னர் வாங்கியது.

2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பாதையில் தலைமைப் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த விஷயங்கள் நமக்குத் தெரியும். 2013, 2015, 2017,2019 மற்றும் 2020 என 5முறை மும்பை அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.
நிச்சயமாக ரோகித் சர்மா தான் மிகச் சிறந்த கேப்டன்
இந்நிலையில் மைக்கேல் வாகன், என்னை பொறுத்த வரையில் உலகின் தலைசிறந்த டி20 அணி எது என்று கேட்டால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். அதற்கு காரணம் அதில் விளையாடும் மிகச்சிறந்த வீரர்களும் குறிப்பாக அந்த அணியை மிக அற்புதமாக தலைமை தாங்கி வரும் ரோகித் சர்மா என்று கூறியுள்ளார்.

ரோகித் சர்மா எப்பொழுதும் அமைதியாக அணிக்கு எது தேவை என்பதை அறிந்து மிக நிதானமாக நடந்து கொள்வார். மேலும் அவர் ஒரு சில விஷயங்களில் மற்ற கேப்டன்களை விட தனித்து செயல்படுவார். அவரது திட்டங்களும், வியூகங்களும் மிக அற்புதமாக இருக்கும். அதன் காரணமாகவே அவர் அணி இன்றும் நம்பர் ஒன் அணியாக நிலைத்து நிற்கிறது குறிப்பிடதக்கது. எனவே என்னைப் பொறுத்தவரையில் விராட் கோலியை விட அவர் மிகச் சிறந்த கேப்டன் என்று கூறுவேன் என்று கூறியுள்ளார்.