இந்த ஜெர்சியோட வொர்த் இவ்வளவுதாங்க!! விமர்சித்த கேப்டன் கோலி!! 1

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியை அணிய இருக்கிறது. இதுகுறித்து விமர்சித்த விராட் கோலி புது ஜெர்சிக்கு மதிப்பெண்ணும் அளித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 6 லீக் போட்டிகளில் ஆடி இருக்கிறது. ஏழாவது லீக் போட்டி இன்று பிர்மிங்காம்  மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த ஜெர்சியோட வொர்த் இவ்வளவுதாங்க!! விமர்சித்த கேப்டன் கோலி!! 2

இதில் ஐசிசியின் புதிய விதிமுறைப்படி, மோதிக்கொள்ளும் இரு அணிகளும் ஒரே நிற ஜெர்சியை அணிய கூடாது என்பதால், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி நீல நிற உடையிலேயே போட்டியை தொடரும். ஆனால், வெளி அணியான இங்கிலாந்து புதிய நிற ஜெர்சியில் ஆட இருக்கும் என கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. புதிய உடை காவி காவி நிறத்தில் தான் இருக்கும் என்ற தகவலும் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இதற்கு ஏற்றார்போல நேற்றைய முன்தினம் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புதிய நிற ஜெர்சியை வெளியிட்டது. இதன் பின்புறம் முழுவதும் காவி நிறத்திலும் முன்பக்கம் வழக்கம் போல இந்திய அணி அணியும் நீல நிறத்திலும் ஆங்காங்கே காவி நிறமும் காணப்பட்டு இருந்தன. இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக பெட்ரோல் பங்குகளில் அணியும் உடை போலவே இது இருக்கின்றது என ஒரு தரப்பும், மத்தியில் ஆட்சி செய்யும் பிஜேபி அணி ஊடுருவலின் பெயரில் தான் காவி நிறம் வைக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனமும் காணப்பட்டது.

இந்த ஜெர்சியோட வொர்த் இவ்வளவுதாங்க!! விமர்சித்த கேப்டன் கோலி!! 3

இந்த புதிய நிற ஜெர்சி உடன் இந்திய வீரர்கள் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். குறிப்பாக கேப்டன் விராட் கோலி, எம் எஸ் தோனி, ஹார்திக் பாண்டியா, முகமது சமி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களிலும் இதன் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கேப்டன் கோலி, ஒரு நாள் அணிவதற்கு இந்தச் ஜெர்சி மிகவும் நன்றாக இருக்கிறது. 8/10 மதிப்பெண்கள் என்னால் கொடுக்க முடியும். ஒரு புதுவித உணர்வாக இருக்கிறது. ஆனால் இதையே அனைத்து போட்டிகளுக்கும் அணிய சொன்னால் நிச்சயம் எங்களால் முடியாது. காரணம், இந்திய அணியின் நிறம் நீலம். ரசிகர்கள் மனதில் இருக்கும் இந்த நீல நிறத்தை எதைக்கொண்டு மாற்றவும் இயலாது என வெளிப்படையாக தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *