முன்னேறிய பும்ராஹ்... சரிவை சந்தித்த கோலி, ஜடேஜா; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !! 1

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி., இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் இரண்டு போட்டியையும், வெறும் 3 நாட்களில் முடித்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் முழுவதுமாக வென்றது.

இந்தநிலையில், இந்தியா இலங்கை இடையேயான இந்த தொடருக்கு பிறகான, புதிய புள்ளி பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி., இன்று வெளியிட்டுள்ளது.

முன்னேறிய பும்ராஹ்... சரிவை சந்தித்த கோலி, ஜடேஜா; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !! 2

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே வேளையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, பேட்ஸ்மேன்களுக்கான தவரிசையில் 5வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 8வது இடத்தை பிடித்துள்ளார்.

 

அதே போல், இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தனியாக போராடி சதம் அடித்த, இலங்கை அணியின் கேப்டனான திமுத் கருணாரத்னே, மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

முன்னேறிய பும்ராஹ்... சரிவை சந்தித்த கோலி, ஜடேஜா; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !! 3

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். விண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முன்னேறிய பும்ராஹ்... சரிவை சந்தித்த கோலி, ஜடேஜா; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !! 4

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் பேட் கம்மின்ஸே முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் ரவிச்சந்திர அஸ்வின் 2வது இடத்திலும், தென் ஆப்ரிக்கா அணியின் ரபாடா 3வது இடத்திலும் நீடிக்கின்றனர். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் பும்ராஹ் தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *