அந்த போட்டியில் தோனி இருக்கும்போதே கீப்பிங் செய்தது எப்படி? விராட் கோலி விளக்கம்! 1

சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் அவர் ரன் குவிப்பில் ஈடுபடுவது வழக்கம். ஒருநாள் கிரிக்கெட்டில் ‘நெம்பர் ஒன்’ பேட்ஸ்மேனும் கோலி தான்.

பேட்டிங் மட்டுமல்லாது பீல்டிங்கிலும் கோலி துடிப்போடு செயல்படுவார். சமயங்களில் இந்தியாவுக்காக அவர் பந்து வீசவும் செய்வார். இந்த சூழலில் இந்திய அணிக்காக கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் விக்கெட் கீப்பிங் செய்த படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.அந்த போட்டியில் தோனி இருக்கும்போதே கீப்பிங் செய்தது எப்படி? விராட் கோலி விளக்கம்! 2

அது குறித்த விவரங்களை அண்மையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் மாயங்க் அகர்வாலோடு ‘ஓபன் நெட்ஸ் வித் மாயங்க்’ என்ற ஆன்லைன் வீடியோ சேட் மூலமாக பகிர்ந்து கொண்டார்.

‘2015இல் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் தோனி தான் கீப்பிங் செய்து வந்தார். ஆட்டத்தின் 44வது ஓவரில் என்னை கீப்பிங் பணியை பார்த்து கொள்ளும் படி சொல்லிவிட்டு டிரெஸ்ஸிங் ரூமிற்கு அவர் சென்று விட்டார்.

அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். ஒவ்வொரு பந்தும் வேக வேகமாக ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி வந்தது. பந்து முகத்தில் பட்டு விடுமோ என்ற சந்தேகமும் இருந்தது. அதனால் ஹெல்மெட் அணிய முடிவு செய்தேன். ஆனால் மைதானத்தில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் ஹெல்மெட்டை அணியவில்லை.

அந்த போட்டியில் தோனி இருக்கும்போதே கீப்பிங் செய்தது எப்படி? விராட் கோலி விளக்கம்! 3
Kandy: India’s Virat Kohli and Mahendra Singh Dhoni walk off the field after the Sri Lankan innings during the second ODI match at Pallekele International Cricket Stadium in Kandy on Thursday. PTI Photo by Manvender Vashist (PTI8_24_2017_000182B)

அப்போது தான் எனக்கு புரிந்தது கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக ஒவ்வொரு பந்தையும் போக்கஸ் செய்து கொண்டே பீல்டிங்கையும் செட் செய்வது எவ்வளவு சிரமம் என்று. நான் அந்த ஒரு ஓவரை இந்தியாவுக்காக கீப்பிங் செய்ய தோனி தான் காரணம்” என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *