11 ஆண்டுகாள நட்பை மறக்காத விராட் கோஹ்லி; வியப்பில் ரசிகர்கள் !! 1

11 ஆண்டுகாள நட்பை மறக்காத விராட் கோஹ்லி; வியப்பில் ரசிகர்கள்

2008-ம் ஆண்டு ஐசிசி யு-19 உலகக்கோப்பையின் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற விராட் கோலி, 11ஆண்டுகள் முடிந்தும் தனக்கும் நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் உள்ள நட்பையும் மறக்கவில்லை, வில்லியம்சனின் ‘தனித்துவ’ பேட்டிங் திறமையையும் மறக்கவில்லை.

ரவீந்திர ஜடேஜா, ட்ரெண்ட் போல்ட், சவுத்தி ஆகியோரும் ஆடியிருந்த 2008 ஐசிசி யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான த்ரில் அரையிறுதியில் கேன் வில்லியம்சன் தலைமை நியூஸிலாந்தை விராட் கோலி தலைமை இந்திய யு.19 அணி வெற்றி பெற்று இறுதிக்குச் சென்றது, அப்போதைய தோழர்களான விராட் கோலி, கேன் வில்லியம்சன் படிப்படியாக வளர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் போது இந்திய மற்றும் நியூஸிலாந்து தேசிய அணியின் கேட்பன்களாகவும் பிரமாதமான வீரர்களாகவும் உருவெடுத்தனர்.

11 ஆண்டுகாள நட்பை மறக்காத விராட் கோஹ்லி; வியப்பில் ரசிகர்கள் !! 2

ஆனால் 2008-ல் விராட் கோலி அளித்த அரையிறுதி தோல்வி அதிர்ச்சிக்கு 2019-ல் கேப்டன் கேன் வில்லியம்சன், விராட் கோலிக்கு அதிர்ச்சியைத் திருப்பி அளித்து இறுதிக்கு நியூஸி.யை இட்டுச் சென்றார்.

ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் விராட் கோலி கேன் வில்லியம்சனின் நட்பையும் ஆட்டத்தையும் மறக்கவில்லை.

இது தொடர்பாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

2008-ல் கேன் வில்லியம்சனுக்கு எதிராக ஆடியது என் நினைவில் இன்னமும் ஆழமாக உள்ளது. அந்த அணியில் மற்றவர்களை விட வில்லியம்சன் தான் தனித்துவமாகத் திகழ்ந்தார். அணியிலிருந்த மற்ற வீரர்களின் பேட்டிங் திறமையைக் காட்டிலும் இவரது திறமை தனித்துவமாக தெரிந்தது. அந்த பாட்ஜிலிருந்து நிறைய வீரர்கள், வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உட்பட ஆடியது தெரிந்திருப்பது நல்லதுதான்.

யு-19 உலகக்கோப்பை என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மைல்கல். (47 என்ற சராசரியுடன் 235 ரன்கள்), அதுதான் பிற்பாடு எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை வளர்த்துக் கொள்ள சிறந்த நடைமேடையாக அமைந்தது. எனவே என் மனதிலும் இருதயத்திலும் யு-19 உலகக்கோப்பை நீங்கா இடம்பெற்றுள்ளது. அது வழங்கிய வாய்ப்பை மதிக்க வேண்டும், என்றார் விராட் கோலி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *