இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் வெளியே இருக்கிறார்கள். அணியில் இடம் பிடிக்க ‘யோ-யோ’ தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அந்த தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என செய்திகள் வந்தன. இந்திய அணியில் இடம் பிடிக்க இந்த புதிய விதமான தேர்வில் இவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை.
உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல் பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துடன் விளையாடிய ஒருநாள் போட்டி தொடரில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய யுவராஜ் சிங், ஒருநாள் போட்டிகளில் அவருடைய அதிகபட்ச ரன்னை அடித்தார். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த யுவராஜ், அந்த பார்மை தக்கவைத்து கொள்ள தவறிவிட்டார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார், அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் செய்யவில்லை. இதனால், மீண்டும் அவரை இந்திய அணியில் இருந்து தூக்கிவிட்டார்கள்.
இன்னொரு பக்கம், நடுவரிசையில் இறங்கி அடித்து விளையாடும் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி இரண்டு வருடத்திற்கும் மேல் ஆகிறது. அவர் கடைசியாக 2015-இல் தென்னாப்ரிக்காவுடன் சொந்த மண்ணில் இந்திய அணி இருதரப்பு தொடரில் தோல்வியை சந்தித்தபோது, அவர் இந்திய அணியில் இருந்தார். சொல்ல போனால், இந்திய அணிக்கு யுவராஜ் சிங்கை மீண்டும் அழைத்து வந்தது விராட் கோலி தான், ஆனால் கேப்டன் நினைத்த படி விளையாட வில்லை என்ற காரணத்தினால், அவரை மீண்டும் அணியில் இருந்து தூக்கி விட்டார்கள்.
யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இருவரும் வெளியே இருக்க கண்டிப்பாக கேப்டன் விராட் கோலி காரணம் இல்லை. யுவராஜ் சிங் கடந்த 5 ஆண்டில் போதிய கிரிக்கெட் விளையாடவில்லை மற்றும் விளையாடிய போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் படி சோபிக்கவில்லை. இதே நிலைமை தான் சுரேஷ் ரெய்னாவுக்கும், உள்ளூர் போட்டிகளில் கூட அவர் சிறப்பாக செயல் படாமல் ஏமாற்றுகிறார். இதனால் தான், இருவருக்கும் அணியில் கிடைக்க வில்லை.
கீழே உள்ள ஸ்டேட்ஸ் பார்த்தால் உங்களுக்கே புரியும்:
யுவராஜ் சிங்
சுரேஷ் ரெய்னா