என்னையும் தோனியையும் பிரிக்க யாராளும் முடியாது : விராட் பெருமிதம்

Kohli stated his friendship has only grown stronger with Dhoni (Credits: BCCI)

என பலவற்றை விராட் கோலி, தோனியைப் பற்றி கூறுகிறார்.

கௌரவ் கபூருடனான பிரேக் பாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் போது பலவற்றை கூறினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் டோனியுடனான நட்புறவு தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது, ‘எனக்கும், டோனிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்த நிறைய பேர் முயற்சிக்கிறார்கள்.

அது தொடர்பான செய்திகளை நானும் சரி, டோனியும் சரி படிப்பது இல்லை. எங்கள் இருவரையும் ஒன்றாக பார்ப்பவர்கள், எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

அவ்வாறான சமயத்தில், ‘அப்படி எங்களுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லையே’ என்று சொல்லி சிரித்துக் கொள்வோம். டோனியுடனான எனது நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது’ என்றார்.

‘அவர் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பதற்க்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எங்களுக்குள் இருக்கும் புரிதல் அதீதமானது. எடுத்துக்காட்டாக ரன் ஓடும் போது அவர் இரண்டு என்று சொல்லிவிட்டால் நான் கண்ணை மூடிக்கொண்டு இரண்டு ஓடிவிடுவேன். ஏனெனில்ன் தோனி எப்போதும் சரியாகத்தான் கூறுவார் என எனக்கு நன்றாகத் தெரியும்.’
எங்களுடைய நட்பு ஆண்டுக்கணக்கில் வளர்ந்துவருகிறது. பலமுறை எங்களுக்குள் சர்ச்சையை ஏற்ப்படுத்தும் வகையில் பலர் முயற்சித்துள்ளனர். அவற்றை நாங்கள் இருவரும் எப்போதும் கண்டுகொண்டதில்லை. மீண்டும் நாங்கள் இருவரும் ஒன்றாக செல்லும் போது, உங்களுக்குள் பிரச்சனை வரவில்லையா எனக் கேட்பார்கள்.”
‘நாங்கள் இன்னும் காமெடி செய்து சிரிப்போம், ஜோக்கடிப்போம். முன்னர் இருந்தது போல் தான் இப்போதும் இருக்கிறோம். என்னுடைய கேபிடன்சியில் அவர் இருப்பது எனக்கு இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது. நான் இன்னும் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிரேன்.
எனக் கூறினார் கோலி

Editor:

This website uses cookies.