இலங்கை அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., இன்று அறிவித்துள்ளது.
விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி.20 தொடர் என இரண்டையும் மிரட்டலாக கைப்பற்றிய இந்திய அணி,அடுத்ததாக இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
அடுத்த சில தினங்களில் இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்தநிலையில், இலங்கை அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் நீண்ட இடைவேளைக்கு பிறகு சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
காயம் காரணமாக கடந்த தொடர்களில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர சாஹல், ரவி பிஸ்னோய்ன், குல்தீப் யாதவ், ஆவேஸ் கான் போன்ற வீரர்களும் இலங்கை அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
டி.20 தொடருக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா (கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், புவனேஷ்வர் குமார் தீபக் சாஹர், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், ஆவேஸ் கான்.