ஐ.பி.எல். ஏலத்தில் சிறந்த வீரர்களை எடுத்து அணியை நன்கு கட்டமைப்போம், உங்களது ஆதரவு கொடுங்க ப்ளஸ் என ரசிகர்களிடம் மன்றாடியுள்ளார் ஆர்சிபி கேப்டன் கோஹ்லி.
கடந்த 3 ஐ.பி.எல். சீசனில் ஆர்சிபி அணி 2 முறை கடைசி இடத்தை பிடித்து மோசமாக வெளியேறியது. 2017-ல் 8-வது இடத்தையும், 2018-ல் 6-வது இடத்தையும், 2019-ல் 8-வது இடத்தையும் பிடித்து பிளேப் ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியையும் கேப்டன் விராட் கோலியையும் ரசிகர்கள் கடும் கலாய்த்து தள்ளினார். முன்னதாக, அந்த அணியில் கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற உலகின் தலைசிறந்த அதிரடி வீரர்கள் இருந்தும் அந்த அணியால் ஐ.பி.எல்.லில் மோசமான நிலையில் உள்ளதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டு டிவில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால் ஆர்சிபி அணி நிர்வாகம் அதை நிராகரித்து கோஹ்லி கேப்டன் பொறுப்பில் தொடர்வார் என தெரிவித்தது.
ஐ.பி.எல். ஏலம் கொல்கத்தாவில் நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி ரசிகர்களிடம் ஆர்சிபி அணிக்கு ஆதரவு கேட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கேப்டன் கோலி தெரிவித்ததாவது:-
“அணியை கட்டமைப்பது பற்றி நாங்கள் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறோம். வலுவான அணியை உருவாக்கி 2020 ஐ.பி.எல். சீசனில் நன்றாக ஆடத்தேவையான அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்வோம். ரசிகர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு தேவை.
ரசிகர்கள் ஆதரவுதான் அணிக்கு விலை மதிப்பில்லாதது. ஆகவே இதுவரை நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றியை தெரிவிக்கிறேன். ஐபிஎல் ஏலத்தை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். இந்த ஏலம் அணிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். நிர்வாக குழுவில் உள்ள மைக் ஹெசன், சைமன் கேடிச் பிரமாதமாக பணியாற்றி வருகின்றனர்” என கூறினார்.
All set for the #IPLAuction? The Captain has a message for you.@imVkohli #ViratKohli #BidForBold #IPL2020 #PlayBold pic.twitter.com/moGkXCz31y
— Royal Challengers Bangalore (@RCBTweets) December 17, 2019