கங்குலியின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார் விராட் கோஹ்லி !! 1

கங்குலியின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார் விராட் கோஹ்லி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஹேமில்டனில் இன்று நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 63 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்து அதிகமான ரன்கள் குவித்தவர்களில் கங்குலி 148 போட்டிகளில் 5,082 ரன்கள் சேர்த்து 3-வது இடத்தில் இருந்தார்.

கங்குலியின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார் விராட் கோஹ்லி !! 2

விராட் கோலி இந்தப் போட்டியில் 51 ரன்கள் சேர்த்ததன் மூலம், 87 போட்டிகளில் 5,123 ரன்கள் சேர்த்து கங்குலியின் சாதனையை முறியடித்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கேப்டனாக இருந்த கோலி 21 சதங்களையும், 23 அரைசதங்களையும் அடித்துள்ளார். விராட் கோலி தனது சராசரியாக 76 ரன்கள் வைத்துள்ளார்.

முன்னாள் கேப்டன் தோனி ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 6,641 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இதில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 5,239 ரன்கள் சேர்த்து 2-வது இடத்தி்ல் உள்ளார்.

கங்குலியின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார் விராட் கோஹ்லி !! 3

உலகளவில் பார்த்தால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 230 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 8,497 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். அதனைத்தொடர்ந்து தோனியும், நியூஸி வீரர் ஸ்டீபென் பிளெம்மிங்(6,295), இலங்கை வீரர் அர்ஜுனா ரணதுங்கா(193 போட்டிகள் 5608) ரன்கள் குவித்துள்ளனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *