விராட் கோலி, ஸ்டீவன் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் இந்த 4 வீரர்களும் சமகாலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பவர்கள். ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் அனைத்து விதமான போட்டிகளிலும் தங்களது திறமையை காட்டி ரன்களை குவித்து வருகிறார்கள்.
ஆனாலும் இந்த நான்கு வீரர்கள் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பலரும் பலவாறு தங்களது காரணங்களைக் கூறி ஒருவரை மிகச் சிறந்த வீரன் என்று தேர்ந்தெடுக்கின்றனர். பெரும்பாலும் விராட் கோலியை தான் ஒவ்வொருவரும் மிகச்சிறந்த வீரர் என்று கூறுகிறார்கள் .

ஏனெனில் விராட் கோலி அனைத்து விதமான போட்டிகளிலும் அதற்கேற்ப ஆடி அசத்துகிறார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே நன்றாக ஆடுகிறார் ஜோ ரூட். அப்படித்தான் கேன் வில்லியம்சன் ஓரளவிற்கு இவர்களுக்கு ஈடு கொடுக்கிறார். ஆனால் மூன்று போட்டிகளிலும் சரிக்கு சமமாக விராட் கோலியால் தான் ஆட முடியும்
.இதன் காரணமாக அவரை தேர்ந்தெடுக்கிறார்கள். அதேபோல் தற்போது இலங்கையின் ஆல் ரவுண்டர் அஞ்சலோ மேத்யூஸ் இந்த நான்கு வீரர்களில் யார் சிறந்த வீரர் என்பது பற்றி கூறியுள்ளார். அவர் கூறுகையில்..
நான் இந்த நான்கு வீரர்கள் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமானால் விராட் கோலியை தான் தேர்வு செய்வேன். அவர்தான் தொடர்ச்சியாக ரன் குவித்து கொண்டே இருக்கிறார். குமார் சங்ககாராவிற்கு பிறகு தொடர்ச்சியாக ரன்களை குவித்தவர். அவர் மட்டும்தான். அவர்தான் மிகச்சிறந்த வீரர் என்று கூறியுள்ளார் அஞ்சலோ மெத்தியூஸ்.