அவரைச் சுற்றி நடப்பதே சரியில்ல, திட்டமிட்டு ராஜினாமா செய்ய வைத்தார்களா?; விராட்கோலி குறித்து பாக்., முன்னாள் கேப்டன் சரமாரி கேள்வி! 1

விராட் கோலி, போதும் என்று நினைத்துவிட்டார். ஆனாலும் அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி குறித்து தொடர்ந்து பேச்சுக்களும் சர்ச்சைகளும் நீடித்து வருகின்றன. டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்ட அவரை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து பிசிசிஐ நீக்கியது. அத்துடன் இந்த விவகாரம் நிற்கவில்லை. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

அவரைச் சுற்றி நடப்பதே சரியில்ல, திட்டமிட்டு ராஜினாமா செய்ய வைத்தார்களா?; விராட்கோலி குறித்து பாக்., முன்னாள் கேப்டன் சரமாரி கேள்வி! 2

பிசிசிஐ விராட்கோலியை நடத்திய விதமும் அவருக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரமும் சரிவர இல்லை. மேலும் ரவிசாஸ்திரி பதவிக்காலம் முடிந்த பிறகு, புதிய அணி நிர்வாகம் மாற்றப்பட்டதால் விராட் கோலிக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று பலரும் பலவிதமான கருத்துக்கள் வெளிவருகின்றன.

இதற்கிடையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை தெரிவித்து உருக்கமான செய்தியையும் வெளியிட்டு இருந்தார். அதனடிப்படையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். விமர்சனங்களையும் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

அவரைச் சுற்றி நடப்பதே சரியில்ல, திட்டமிட்டு ராஜினாமா செய்ய வைத்தார்களா?; விராட்கோலி குறித்து பாக்., முன்னாள் கேப்டன் சரமாரி கேள்வி! 3

“விராட் கோலி ட்விட்டர் பதிவை பார்க்கையில், அவர் போதும் என்று நினைத்து விட்டார் என தெரிகிறது. மேலும் அணி நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடுகள் இருப்பதும் அவரது பதிவில் மூலம் தெரிகிறது. அணி நிர்வாகத்தின் சில முடிவுகளால் மனதளவில் அழுத்தத்தை அனுபவித்திருக்கிறார் என உணரமுடிகிறது.

ரவி சாஸ்திரி மற்றும் குழுவினர் இருந்தபோது விராட் கோலி மற்றும் அவரது அணியினர் இயந்திரம் போல ஆக்ரோஷத்துடன் செயல்பட்டனர். அந்த ஆக்ரோஷம் தற்போது குறைந்து இருப்பதை நன்றாக உணர முடிகிறது. ஏதேனும் அழுத்தத்தை அவருக்கு கொடுத்திருக்க நேர்ந்திருக்கும். மேலும் அணி நிர்வாகம் இல்லை என்று மறுத்தாலும், விராட்கோலி போன்ற வீர இப்படி மனம் திறந்து பேசும் பொழுது அதனை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு யாரும் இல்லை. நிச்சயம் சில விஷயங்கள் சரியாக சொல்லாததால் அவர் தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *