ஐசிசி தரவரிசை பட்டியல் முன்னேற்றம் கண்ட விராட் கோலி மற்றும் ஹசரங்கா !! 1

ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி வனிந்து ஹசரங்கா போன்ற வீரர்கள் ஐசிசி t20 தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலங்கள் சதம் அடிக்க முடியாமல் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி,நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் மேல் எழுந்த விமர்சனத்தை எல்லாம் தவிடுபொடியாக்கியுள்ளார்.

ஐசிசி தரவரிசை பட்டியல் முன்னேற்றம் கண்ட விராட் கோலி மற்றும் ஹசரங்கா !! 2

குறிப்பாக ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியில் 122* ரன்கள் அடித்து கிட்டத்தட்ட எட்டு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஒரு இடம் முன்னேறி 14 இடத்தை பிடித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து ஆசியக் கோப்பையில் மிகச் சிறப்பு வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் ஒரு இடம் முன்னேறி 11 வது இடத்தில் இருந்து பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசி தரவரிசை பட்டியல் முன்னேற்றம் கண்ட விராட் கோலி மற்றும் ஹசரங்கா !! 3

மேலும் ஆசிய கோப்பையில் இலங்கை அணி கோப்பையை வெல்வதற்கு உதவியாக இருந்த ராஜபக்சே(34வது இடம்) மற்றும் ஹசரங்கா ஆகிய இரு வீரர்களும் டி20 தரவரிசை பட்டியலில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ஐசிசி தரவரிசை பட்டியல் முன்னேற்றம் கண்ட விராட் கோலி மற்றும் ஹசரங்கா !! 4

இதில் ஹசரங்கா பேட்டிங் தரவரிசையில் 27ம் முன்னேறி 152 வது இடத்தையும் மற்றும் ஆல்ரவுண்டர் தர வரிசையில் ஏழு இடம் முன்னேறி 4வது இடத்தையும் பிடித்துள்ளார். இவருடைய அபாரமான வளர்ச்சி நிச்சயம் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் இவர்களை தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுப் ஒன்பது இடங்கள் முன்னேறி 25 வது இடத்தையும்,முகமது நவாஸ் ஏழு இடங்கள் முன்னேறி 34வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.ஐசிசி தரவரிசை பட்டியல் முன்னேற்றம் கண்ட விராட் கோலி மற்றும் ஹசரங்கா !! 5

மேற்கூறப்பட்ட வீரர்கள் எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இன்னும் அதிகமான இடங்கள் முன்னேறி சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *