2019 வரைக்கும் பேருக்கு தான் விராட்கோலி கேப்டன், உண்மையான கேப்டன் அவரு; தினேஷ் கார்த்திக் போட்டுடைத்த உண்மை! 1

விராட் கோலி கேப்டனாக இருந்தாலும் பந்துவீச்சாளர்கள் தோனியை கேட்டுத்தான் பந்துவீசுவார்கள் என தினேஷ் கார்த்திக் பேட்டியளித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி தொடருக்குப் பிறகு இந்திய அணி லிமிடெட் ஓவர் போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. குறிப்பாக மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. மேலும் 10 முதல் 40 ஓவர்களுக்கு போதிய அளவிற்கு விக்கெட்டுக்களை எடுக்க முடியாமலும் இந்திய அணி திணறி வருகிறது. இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள் பெரிதளவில் தாக்கமும் ஏற்படுத்தவில்லை.

2019 வரைக்கும் பேருக்கு தான் விராட்கோலி கேப்டன், உண்மையான கேப்டன் அவரு; தினேஷ் கார்த்திக் போட்டுடைத்த உண்மை! 2

இதற்கு முக்கிய காரணம் என்னவென்று தினேஷ் கார்த்திக் தனது சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார்.

“குல்தீப் யாதவ் மற்றும் சஹல் இருவரும் விராட் கோலியின் கேப்டன் பொறுப்பில் நீண்டகாலம் விளையாடி நிறைய விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கலாம்  ஆனால் அவர்கள் இருவரும் இந்திய அணியில் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு வந்ததற்கு முக்கிய காரணம் அப்போது மகேந்திர சிங் தோனி அணியில் இருந்தார். பந்துவீச்சாளர்களுக்கு அவர் எத்தகைய அணுகு முறையை கொடுப்பார் என்று அனைவருக்கும் தெரியும்.

2019 வரைக்கும் பேருக்கு தான் விராட்கோலி கேப்டன், உண்மையான கேப்டன் அவரு; தினேஷ் கார்த்திக் போட்டுடைத்த உண்மை! 3

பந்து எப்படி திரும்புகிறது? எந்த அளவிற்கு வேகமாக வருகிறது? என்று அவ்வபோது சுழல்பந்து வீச்சாளர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருப்பார். விராட் கோலி கேப்டனாக இருந்தாலும் ஆலோசனைகள் அனைத்தையும் தோனி கொடுப்பார் என்று பார்த்திருக்கிறோம். தற்போது அவர் இல்லாததால் சுழல் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சற்று இறக்கம் கண்டு இருக்கிறது என தெளிவாக தெரிகிறது.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் கீப்பர் மிகப்பெரிய உதவிகரமாக இருப்பார். அதிலும் தோனி போன்று நிறைய அனுபவம் மிக்க ஒருவர் துணையாக இருந்தால் எந்த ஒரு சூழலிலும் தைரியமாக பந்து வீசலாம். ஆனால் தற்போது ரிஷப் பண்ட் பெரிதாக சுழல் பந்துவீச்சாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. அதுவும் சுழல்பந்துவச்சாளர்களின் செயல்பாடு குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

2019 வரைக்கும் பேருக்கு தான் விராட்கோலி கேப்டன், உண்மையான கேப்டன் அவரு; தினேஷ் கார்த்திக் போட்டுடைத்த உண்மை! 4

கடந்த 2, 3 வருடங்களாக இந்திய அணியில் தோனி இல்லாதது எத்தகைய மாற்றத்தையும் சரிவையும் கொடுத்திருக்கிறது என முடிவுகள் மூலம் தெளிவாக தெரிகிறது. டி20 உலகக்கோப்பை, தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் ஒருநாள் தொடர் என அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறோம்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *