இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் சிலையை சேதப்படுத்திய ரசிகர்கள் !! 1
இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் சிலையை சேதப்படுத்திய ரசிகர்கள்

டெல்லி உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ள வீராட் கோலியின் மெழுகு சிலையுடன் போட்டி போட்டு கொண்டு ரசிகர்கள் செல்பி எடுததால் காது பகுதி உருகியது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை கடந்த 6ம் தேதி வைக்கப்பட்டது.

இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் சிலையை சேதப்படுத்திய ரசிகர்கள் !! 2

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனை படைத்த பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது.

இதில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் ஆகியோரது சிலைகள் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியின் சிலையும்  சேர்ந்துள்ளது. வீராட் கோலியின்  மெழுகு சிலையை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்துக்கு வர தொடங்கினர். அதுமட்டுமில்லாமல்  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி போட்டு செல்ஃபி எடுத்து கொண்டும் வருகின்றனர்.

இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் சிலையை சேதப்படுத்திய ரசிகர்கள் !! 3

இதனால் வீராட் கோலியின் மெழுகு சிலையின் வலதுபக்க காது உருகியது. தொடர் காமிராக்களின் வெளிச்சத்தால் ஏற்பட்ட சூட்டின் காரணமாக மெழுகு உருகி இருக்கலாம் என்று கூறப்படுகிரது. இதனைத்தொடர்ந்து உடனே அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் சிலையை பழுது பார்க்கும் பணிக்கு எடுத்து சென்றனர். இதுவரை வைத்த மெழுகு சிலையிலேயே பழுதான முதல் சிலை விராட் கோலியின் சிலைதான் என்பது குறிப்பிடத்தக்கதது.

இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் சிலையை சேதப்படுத்திய ரசிகர்கள் !! 4

அப்பகுதியில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததே அவரது சிலையின் காது பகுதி உடைய காரணம் என அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் கூட்டநெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடைந்த காதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *