வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பங்களிப்பு இதுதான் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் அறிவுரை.
இந்தியா வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (6ம் தேதி ) நடைபெற உள்ளது. சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். விராட் கோலி முதன்முறையாக ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் சாதரண வீரராக விளையாட உள்ளதும் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் விராட் கோலி சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடுவதால் அவர் மீது எந்த ஒரு அழுத்தமும் கிடையாது, இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர், விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பொழுது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ராஜினாமா செய்தேன் என்று தெரிவித்திருந்தால், விராட் கோலியின் பேட்டிங் மற்றும் இந்திய அணியில் விராட் கோலியின் வேலை என்னவாக இருக்கும் என்பது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு மத்தியில் கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், தற்பொழுது விராட் கோலி கேப்டன் இல்லை ஆனால் அவர் நீண்டகாலமாகவே இந்திய அணியில் உள்ளார். கேப்டன் இல்லை என்றாலும் விராட் கோலி தலைமைத்துவம் பொருந்தியவர், இதன் காரணமாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேப்டனை சரியான பாதையில் விராட் கோலி வழிநடத்த வேண்டும். உண்மையில் விராட் கோலி இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, அவர் நிச்சயம் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மாவிற்கும் சக வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று இர்பான் பதான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.