நீ வெளிய நான் உள்ளே ! விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளருக்கு தலைமை பயிற்சியாளர் பதவி !
டெல்லி அணிக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் முதல்தர போட்டியில் ஒரு வீரராக விளையாடியவர் ராஜ்குமார் சர்மா. விராட் கோலியின் சிறுவயதாக இருக்கும்போது அவருக்கு பயிற்சியாளராக இருந்து செயல்பட்டவர் இவர்தான். இந்நிலையில் ராஜ்குமார் சர்மாவிற்கு டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்து அவரை நியமித்திருக்கிறது.
2020 மற்றும் 2021ம் ஆண்டு நடைபெறப்போகும் டெல்லி அணியின் உள்ளூர் போட்டிகளில் இவர் தான் பயிற்சியாளராக செயல்படுவார். 55 வயதாகும் ராஜ்குமார் 2016ஆம் ஆண்டு துரோணாசாரியா விருது வென்றிருக்கிறார். மேலும் டெல்லி அணிக்கு சீனியர் பந்துவீச்சாளராக இருந்திருக்கிறார். இந்திய அணிக்காக விளையாடிய இல்லை என்றாலும் உள்ளூர் வட்டாரங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்படுபவர்.

மேலும் டெல்லி அணியின் பயிற்சியாளராக குர்ஷரன் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் இந்திய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியவர். கொரானா வைரஸ் தொற்று காரணமாக ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தொடரலாம் என்ற நிலைதான் இருக்கிறது. இந்நிலையில் தான் இவருக்கு பயிற்சியாளர் வாய்ப்பு கொடுக்கப்படும்.

விராட் கோலி தற்போது உலகின் தலை சிறந்த வீரராக இருக்கிறார் என்றால் அதில் இவருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. பல நேரங்களில் தனது இயல்பான ஆட்டம் பாதிக்கப்பட்டபோது இவர்தான் சென்று விராட் கோலி மாற்றங்களை செய்து கொள்வார். இதனை வைத்து விராட் கோலியின் ரசிகர்கள் பெருமை பாடி வருகின்றனர்.
அதாவது இந்தியாவிற்கு வெளியே சர்வதேச அளவில் விராட் கோலி ஒரு பக்கம் கவனம் செலுத்திக் கொண்டிருக்க இந்தியாவுக்கு உள்ளே அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ் குமார் சர்மா ஒரு மிகப்பெரிய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று புகழ் பாடி வருகின்றனர்.
