ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து, தொடரையும் இழந்துவிட்ட நிலையில் இரு அணிகள் இடையேயான அதிக முக்கியத்துவம் இல்லாத கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரின் 3வது போட்டியில் 78 பந்துகளுக்கு 63 ரன்கள் எடுத்த நிலையில் ஹஸல்வுட் வீசிய பந்தில் கேட்ச் என்ற முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் தனது 11 வருட சாதனையைவீனாக்கினார்.
விராட் கோலி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார் இருந்தபோதும் 2020 அவருக்கு சிறப்பாக அமையவில்லை. இதுவரை அவர் ஆண்டுக்கு ஒரு சதமாவது அடித்து தனது அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இவர் இந்த வருடம் அதை தவற விட்டதால் அந்த 11 வருட சாதனையை வீணாக்கினார். இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி சிறப்பான முறையில் அணியை வழிநடத்தி கொண்டு இருக்கிறார் அதேசமயம் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக உள்ளது இந்நிலையில் இவர் இந்த ஆண்டு ஒரு சதம் கூட அடிக்காத கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று 2008 இல் இவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கெடுத்து ஒரு சதம் கூட அடிக்கவில்லை அதன்பின் களமிறங்கிய அனைத்து வருடங்களிலும் ஒரு சதமாவது அடித்து சாதனை படைத்திருந்தார்.
2020 இல் விராட் கோலி 9 சர்வதேச போட்டியில் பங்கெடுத்து 431 ரன்கள் மட்டுமே எடுத்தார் இவருடைய ஆவரேஜ் 47.88 ஆகும். அதில் இவர் ஐந்து முறை அரைசதம் அடித்தார் அதில் நான்கு முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரை சதம் அடித்துள்ளார்.

முன்னாள் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 19 வருடங்கள் தொடர்ந்து இச்சாதனையைப் புரிந்துள்ளார் விராட் கோலி இந்த சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த இந்த ஆண்டு ஒரு சதம் கூட அடிக்காததால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது என்பது சாத்தியமான விஷயமாக இருக்காது என்று கருதப்படுகிறது