இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தற்போத் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் இந்திய அணி திணற, ‘பாகுபலி’ போல் வந்து ஒரு சத அடித்து அணியைக் கரை சேர்த்தார் கோலி.
தனது 200ஆவது போட்டியிலும் சத அடித்து தனது 31ஆவது சதத்தை பூர்த்தி செய்தார் கோலி. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியளில் ஜாம்பவான் சச்சினுக்குப் (49) அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.
அதே போல், 200ஆவது போட்டிகளில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியளிலும் தென்னாப்பிரிக்கெ வீரர் (101*) ஏ.பி.டி வில்லியர்சின் சாதனையதை தகர்த்து அதிக ரன் அடித்துள்ளார் விராட்.
200ஆவது போட்டியில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியல் :
- விராட் கோலி (இந்தியா) – 121
- ஏ.பி.டி வில்லியர்ஸ் (தென்) – 101*
- பிரெண்டன் மெக்கல்லம் (நியூசி) – 85
மேலு, அதே போல் முக்கியமாக தன்னுடைய 200ஆவது ஒரு நாள் போட்டிக்குப் பின் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியளிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் விராட்.
200ஆவது போட்டிகுப் பின் அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியள்
- விராட் கோலி* (இந்தியா) – 8888 ரன், சராசரி 55.22
- ஏ.பி.டி வில்லியர்ஸ்* (தென்) – 8621 ரன், சராசரி 54.56
- சௌரவ் கங்குலி (இந்தியா) – 7747 ரன், சராசரி 43.04
- டேஸ்மன்ட் ஹயன்ஸ் (மே.இ.தீ) – 7445 ரன், சராசரி 42.54
விராட் கோலி அடுத்தடுத்து பல சாதனைகளைப் படைத்து வருகிறார். குறைந்த போட்டிகளில் 31 சதம் அடித்த வீரர்கள் பட்டியளிலும் ஜாம்பவாம் சச்சின் டெண்டுகரைத் தாண்டி முதல் இடம் பிடித்துள்ளார்.
மேலு, விராட் கேப்டனாகவும் இந்திய அணிக்காக அற்புதமாக செயல்படுகிறார். இவரது தலைமையின் இந்திய அணி முதன் முதலாக அயல்நாட்டு மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் அனைத்தும் வென்று சாதனை படைத்துள்ளது.
மேலும், இவரது தலைமையில் அடுத்தடுத்து 8 டெஸ்ட் தொடர்களிலும், 6 ஒரு நாள் தொடர்களிலும் வெற்றி பெற்று சாதனைகளை படைத்துள்ளது.