ராஜஸ்தான் அணியின் மானத்தை இவர் தான் காப்பாற்றுகிறார்; சேவாக் அதிரடி கருத்து !! 1

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஃப்ரா ஆர்ச்சர் என்னும் ஒற்றை ஆளை நம்பி தான் உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

2020 க்கான ஐபிஎல் போட்டி தொடர் துபாய் அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அணிகளும் கோப்பையை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே மூன்று அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த நிலையில் நான்காவது இடத்திற்கான போட்டி மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற பஞ்சாப் அணியைவெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் அணி வீரர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள் இதற்கு முக்கிய காரணம் ஆச்சர் பந்துவீச்சே எனலாம்.

ராஜஸ்தான் அணியின் மானத்தை இவர் தான் காப்பாற்றுகிறார்; சேவாக் அதிரடி கருத்து !! 2

கொல்கத்தாவுக்கு எதிரான  போட்டி ராஜஸ்தான் அணிக்கு மிக முக்கியமான ஒன்றாகும் .இதில் வெற்றி பெறுவதன் மூலம் ராஜஸ்தான் அணி தனது பிளே ஆஃப் சுற்றினை உறுதி செய்யும்.

இந்தநிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக், ராஜஸ்தான் அணி ஜோஃப்ரா ஆர்ச்சர் என்னும் ஒற்றை வேகப்பந்து வீச்சாளரை நம்பி தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது ராஜஸ்தான் அணியில் சோப்ரா ஆர்ச்சரை தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ஒழுங்காக செயல்படவில்லை ஆர்ச்சர் ஒருமுனையில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்களை எடுத்த நிலையில், அங்கித் ராஜ்புட், கார்த்திக் தியாகி போன்றவர்கள் ரன்களை வாரி வழங்குகிறார்கள் இந்த நிலை நீடித்தால் ராஜஸ்தான் அணிக்கு பெரும் நெருக்கடியாக அமையும்.

ராஜஸ்தான் அணியின் மானத்தை இவர் தான் காப்பாற்றுகிறார்; சேவாக் அதிரடி கருத்து !! 3

ஒவ்வொரு போட்டியிலும் மாஸ் காட்டி வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர், 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்று இவர் 13 போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *