எவ்வளவு கோடி ஆனாலும் சரி நடராஜனை எடுங்கள் ! ஏலத்தில் நடராஜனுக்காக வாதித்த விரேந்தர் சேவாக் !
தங்கராசு நடராஜன் 2017-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக தேர்வானார். அதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு டி.என்.பி.எல் தொடரில் பிரம்மாண்டமாக பந்துவீசி சூப்பர் ஓவரில் தனது அணியை வெற்றிபெற வைத்திருந்தார். மேலும் அந்த வருடம் உள்ளூர் போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தார். தற்போது எப்படி 6 பந்துகளுக்கு 6 ஏக்கர் வீசுகிறாரோ அதேபோல் 2016ஆம் ஆண்டு டி.என்.பி.எல் தொடரில் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தார்.
இந்த திறமையை பார்த்த அப்போதைய பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்த விரேந்தர் சேவாக் எப்படியாவது அவரை நமது அணியில் எடுக்க வேண்டும் என்று கத்தியிருக்கிறார். இதுகுறித்து தற்போது பேசியிருக்கிறார் விரேந்தர் சேவாக். அவர் கூறுகையில் ஐபிஎல் தொடரில் நடராஜனை பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்தது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.
உள்ளூர் போட்டிகளில் விளையாடும் ஒரு மிகச்சிறிய வீரரை எப்படி ஐபிஎல் அணிகளில் எடுக்கிறீர்கள் என்று அனைவரும் என்னிடம் கேள்வி கேட்டனர். அதிலும் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஏன் எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டனர். நான் பணத்தை பற்றி கவலைப்படவில்லை. அவரிடம் பெரிய திறமை இருக்கிறது.

மேலும் எங்களது அணியில் சில தமிழக வீரர்கள் இருந்தார்கள் அவர்கள் அனைவரும் என்னுடன் நடராஜன் மிகச்சரியான பந்துவீச்சாளர்கள் யார்க்கர் மிகத்தெளிவாக வீசுவார் என்று தெரிவித்திருந்தனர். அதனை தாண்டி நான் அவரது பந்துவீச்சு வீடியோக்களை பார்த்து இருந்தேன். அதன் பின்னர்தான் ஏலத்தின் போது அவரை எப்பாடுபட்டாவது எத்தனை கோடிகள் செலவு செய்தாவது எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
ஏனென்றால் அப்போது எங்கள் அணியில் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசும் வீரர்கள் இல்லை. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வருடம் நடராஜன் காயம் அடைந்து விட்டார். அவரால் பல போட்டிகளில் விளையாட முடியவில்லை. அவர் விளையாடிய ஒரு சில போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்று இருந்தோம்.

தற்போது நான் ஏலத்தில் எடுத்த நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அவருக்கு டி20 போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்து இருக்கிறது. என்ன நடந்தாலும் நல்லது தான் நடராஜனுக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து நன்றாக ஆடி இந்திய அணியின் சிறப்பான இடத்தை நிலையாக பிடிக்க வேண்டும் என்று அவருக்கு வாழ்த்து கூறுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் விரேந்தர் சேவாக்.