இன்னும் கொஞ்ச வருசம் விளையாடிருக்கலாமே தலைவா..? ரசிகர்களை புலம்ப வைத்த சேவாக் !! 1

விழிப்புணர்விற்காக நடத்தப்படும் சாலை பாதுகாப்பு டி.20 தொடரில் விரேந்திர சேவாக் 35 பந்துகளில் 80 ரன்கள் குவித்து மாஸ் காட்டினார்.

சாலை பாதுகாப்பு குறித்தாஅ விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு டி.20 தொடர் என்ற பெயரில் டி.20 தொடர் இந்தியாவில் நடத்தப்படுவது வழக்கம். இதில் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் பலர் கலந்து கொண்டு விளையாடுவர். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு இந்த தொடரில் ஆடுகின்றனர்.

இந்த தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் வங்கதேச லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச லெஜண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இன்னும் கொஞ்ச வருசம் விளையாடிருக்கலாமே தலைவா..? ரசிகர்களை புலம்ப வைத்த சேவாக் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச லெஜண்ட்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான நஜிமுதீன் 49 ரன்கள் குவித்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதன் மூலம் 19.4 ஓவரில் வெறும் 109 ரன்கள் மட்டுமே எடுத்த வங்கதேச லெஜண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய லெஜண்ட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக வினய் குமார், ப்ரக்யான் ஓஜா மற்றும் யுவராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இன்னும் கொஞ்ச வருசம் விளையாடிருக்கலாமே தலைவா..? ரசிகர்களை புலம்ப வைத்த சேவாக் !! 3

இதனையடுத்து வெறும் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு, முன்னாள் ஜாம்பவான்களான சேவாக்கும், சச்சினும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது வழக்கமான ஸ்டைலில் ரன் வேட்டையை துவங்கிய சேவாக், வங்கதேச லெஜண்ட்ஸ் வீசிய பந்துகளை எல்லாம் அசால்டாக நாளாபுறமும் சிதறடித்த சேவாக் 35 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்தார். மறுமுனையில் சச்சின் டெண்டுல்கரரும் சேவாக்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடியதன் மூலம் 11வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை எட்டிய இந்திய லெஜண்ட்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணிக்காக விளையாடிய போது எப்படி அதிரடியாக விளையாடினாரோ, அதுபோன்றே தற்போதும் விளையாடிய சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். சேவாக் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களாவது இந்திய அணிக்காக விளையாடியிருக்கலாம் என்பதே பெரும்பலான ரசிகர்களின் கருத்தாக உள்ளதை சமூக வலைதளங்கள் மூலம் காண முடிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *