இதுக்கு நீங்க விளையாடாமலே இருக்கலாம்; விளாசும் விரேந்திர சேவாக் !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமாக விளையாடிய பெங்களூர் அணியை முன்னாள் வீரர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதுக்கு நீங்க விளையாடாமலே இருக்கலாம்; விளாசும் விரேந்திர சேவாக் !! 2

இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அசால்டாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்குள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் பெங்களூர் அணியை முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெங்களூர் அணியின் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்தான தங்களது கருத்துக்களையும் முன்னாள் வீரர் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இதுக்கு நீங்க விளையாடாமலே இருக்கலாம்; விளாசும் விரேந்திர சேவாக் !! 3

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேவாக்கும் தன் பங்கிற்கு பெங்களூர் அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து சேவாக் பேசுகையில், “பெங்களூரு இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் அதிர்ச்சி அடைய வேண்டாம் என நான் இந்த போட்டிக்கு முன்பே சொல்லியிருந்தேன். ஆனால் அதை யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் ஜோக் செய்கிறேன் என சொல்லி இருந்தீர்கள்.

இதுக்கு நீங்க விளையாடாமலே இருக்கலாம்; விளாசும் விரேந்திர சேவாக் !! 4

ஆட்டத்தில் டாஸ் வென்ற அவர்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்கள். சுமாரான தொடக்கமும் கிடைத்தது. டிவில்லியர்ஸ், கோலி என இருவரும் ஏழாவது ஓவரிலிருந்தே ஒன்றாக விளையாடினர்.

இருப்பினும் 18வது ஓவர் வரை ஏதோ கோமோ நிலையில் இருந்து போலவே அவர்களது ஆட்டம் இருந்தது. அதை பார்த்த நான் குட்டி தூக்கமும் போட்டு எழுந்தேன். அப்போது கூட அவர்கள் அதே மாதிரி தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அதே போல நேற்றைய ஆட்டத்தில் பச்சை நிற ஜெர்சியில் கோலி அணி விளையாடியது. அதை பாகிஸ்தான் என எண்ணி தோனி அந்த அணியை அடித்து நொறுக்கி விட்டார்” என தனது ஸ்டைலில் நக்கலாக பேசியுள்ளார் சேவாக்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *