அஸ்வின் வேண்டாம்..  அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த சேவாக் !! 1
அஸ்வின் வேண்டாம்..  அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த சேவாக்

ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.

அஸ்வின் வேண்டாம்..  அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த சேவாக் !! 2

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணி 199 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, பேட்டிங்கில் சற்று சொதப்பினாலும், விராட் கோலி மற்றும் கே.எல் ராகுலின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரையும் துவங்கியது.

இந்திய அணி 11ம் தேதி நடைபெற இருக்கும் தனது அடுத்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியையும், 14ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டிக்கான ஆடும் லெவனில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் வேண்டாம்..  அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த சேவாக் !! 3

இது குறித்து விரேந்திர சேவாக் பேசுகையில், “ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டிக்கான ஆடும் லெவனில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என கருதுகிறேன். அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தற்போது நல்ல பார்மில் இருப்பதால் ஆஃப்கானிஸ்தான் போட்டிக்கான ஆடும் லெவனில் ஷமிக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும். ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமியை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டி நடைபெறும் ஆடுகளம் மிக சிறியது என்பதால் முகமது ஷமிக்கு இடம் கொடுப்பதே சரியானதாக இருக்கும். அதே போல் அஸ்வினின் வயதை கருத்தில் கொண்டும் இந்திய அணி முடிவு செய்ய வேண்டும். ஆஃப்கானிஸ்தான் போன்ற அணிகளுடனான போட்டிகளில் அஸ்வினுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பெரிய போட்டிகளில் அவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *