கோஹ்லி - அனுஷ்கா சர்மா விவாகரத்து உண்மையா? கேப்டன் கோஹ்லி பதில்! 1

கோஹ்லி – அனுஷ்கா சர்மா விவாகரத்து வதந்தி – பதிலடி கொடுத்த கேப்டன் கோஹ்லி!

விராட் கோஹ்லி – அனுஷ்கா சர்மா விவாகரத்து பெறப்போவதாக வெளியான வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் விராட் கோஹ்லி.

இந்தியாவின் பிரபல நட்சத்திர ஜோடியான இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் நீண்டகாலமாக ரகசியமாக காதலித்து, ரகசியமாக 2017ல் திருமணமும் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ‘விருஷ்கா’ என்ற செல்லப்பெயரும் உண்டு.

கோஹ்லி - அனுஷ்கா சர்மா விவாகரத்து உண்மையா? கேப்டன் கோஹ்லி பதில்! 2
Indian cricketer Virat Kohli (L) and his wife Bollywood actress Anushka Sharma pose during their wedding reception in Mumbai on December 26, 2017.
They were wed in Tuscany on December 11, ending weeks of frenzied speculation in the Indian media about the high profile couple. / AFP PHOTO / Sujit JAISWAL (Photo credit should read SUJIT JAISWAL/AFP/Getty Images)

இந்நிலையில், இவர்கள் விவாகரத்து செய்யப் போவதாக ட்விட்டரில் #virushkadivorce என்கிற ஹேஸ்டேக் நேற்று டிரெண்ட் ஆனது. இரு பிரபலங்கள் ஒன்றாக வாழ்வதும், கருத்து வேறுபாடு காரணமாக விரைவில் பிரிவதும் இயல்பாக நடக்கும் ஒன்று என்பதால் பலரும் இதை உண்மை என நம்ப துவங்கினர்.

ஆனால், இவர்கள் விஷயத்தில் இது வதந்தி என தெரியவந்தது. 2016ல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிறிய பிரிவின்  போது வெளியான பழைய செய்தியை வைத்து புரளி கிளப்பி இருக்கின்றனர் நெட்டிசன்கள். பாவம்! வேற கன்டென்ட் கிடைக்கவில்லை போலும்.

கோஹ்லி - அனுஷ்கா சர்மா விவாகரத்து உண்மையா? கேப்டன் கோஹ்லி பதில்! 3

இந்நிலையில், இந்த செய்தி வதந்தி என தெரிவிக்கும் விதமாக, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ள அனுஷ்கா சர்மா, அதில் “வீட்டில் சூரிய ஒளிபடும் அனைத்து இடங்களும் எனக்கு நன்றாக தெரியும் என உங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா” என மறைமுகமாகி கோஹ்லியிடம் சொல்வதைப்போல குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பின்னுட்டத்தில் ஹார்ட்டின் எமோஜிக்களை பறக்கவிட்டு அன்பை வெளிப்படுத்தியுள்ளார் நம்ம கேப்டன் கோஹ்லி.

இதைக்கண்ட நெட்டிசன்கள், “அவ்வளவு தான்.. பஞ்சாயத்து முடிஞ்சுபோச்சு! கெளம்பு.. கெளம்பு” என்றவாறு நடையை கட்டியுள்ளனர்.

View this post on Instagram

I told you I knew all the sunlight spots ??

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *