இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான தொடரில் இந்த அணிதான் முழுமையாக வெல்லும்! அடித்து பேசும் விவிஎஸ் லட்சுமணன்!
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது இதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியாளர்கள் என அனைவரும் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டனர். அங்கே சிட்னி நகருக்கு வெளியே அனைவரும் சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

14 நாட்கள் தனிமைப்பட்ட பின்னர் இந்திய வீரர்கள் அனைவரும் சிட்னி மைதானத்திற்குள் அழைத்து வரப்படுவார்கள். நவம்பர் 27ஆம் தேதி முதல் ஒருநாள் தொடர் துவங்க இருக்கிறது அதன் பின்னர் டிசம்பர் 4ஆம் தேதி டீ20 வரும் டிசம்பர் 17-ம் தேதி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் மூன்று விதமான தொடர்களையும் வெற்றி பெறும் என்றும் அதற்கான சாத்தியமும் நம்பிக்கையும் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் லட்சுமணன். அவர் கூறுகையில்…

என்னைப் பொறுத்தவரையில் மூன்று விதமான தொடரையும் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அருமையாக இருக்கிறது. அனைத்து மிகச்சரியாக திட்டமிடப்பட்டிருக்கிறது. நமது அணியை பார்த்தால் வலிமை வாய்ந்த அணியாக தான் இருக்கிறது. மூன்று விதமான போட்டிகளிலுமே மிகச் சிறந்த அணியை தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த அணியே போதும் வேறு அணி தேவையில்லை. இதனை வைத்தே வெற்றி பெற்றுவிடலாம் மூன்று விதமான தொடரையும் இந்திய அணி வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் லட்சுமணன்.
இந்திய – ஆஸ்திரேலிய தொட்ருக்கான முழு அட்டவணை
1 வது ஒருநாள்: சிட்னி (நவ. 27)
2 வது ஒருநாள்: சிட்னி (நவ. 29)
3 வது ஒருநாள்: கான்பெர்ரா (டிச. 2)
1 வது டி 20: கான்பெர்ரா (டிசம்பர் 4)
2 வது டி 20: சிட்னி (டிசம்பர் 6)
3 வது டி 20: சிட்னி (டிசம்பர் 8)
1 வது டெஸ்ட்: அடிலெய்ட் (டிசம்பர் 17-21)
2 வது டெஸ்ட்: மெல்போர்ன் (டிசம்பர் 26-30)
3 வது டெஸ்ட்: சிட்னி (ஜன. 7-11, 2021)
4 வது டெஸ்ட்: பிரிஸ்பேன் (ஜன. 15-19)