நிச்சயம் இந்த இரண்டு இளம் வீரர்களுக்கும் உலகக்கோப்பையில் வாய்ப்பு காத்திருக்கிறது; விவிஎஸ் லக்ஷ்மன் உறுதி !! !! 1

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்து டி20 போட்டிகளில் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு 3-2 என தொடரை கைப்பற்றியது.

கடந்தாண்டு நடந்த 2020 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர்களான இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் தனது அபாரமான பார்மின் மூலம் தங்களது திறமைகளை கிரிக்கெட் உலகிற்கு தெரியப் படுத்தினார்.இருந்தபோதும் இரு வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை, இதனால் பெரும் விரக்தியில் இருந்த இரண்டு வீரர்களுக்கும் 2021 இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

நிச்சயம் இந்த இரண்டு இளம் வீரர்களுக்கும் உலகக்கோப்பையில் வாய்ப்பு காத்திருக்கிறது; விவிஎஸ் லக்ஷ்மன் உறுதி !! !! 2

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இஷான் கிஷன் தான் அறிமுகமான போட்டியில் 32 பந்துகளுக்கு 56 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்களை திணறடித்தார் பின் அவருக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. அவருக்கு பதில் சூரியகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது,அதனை நன்றாக பயன்படுத்திக்கொண்டு சூர்யகுமார் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து தனது பார்மை நிரூபித்தார். அறிமுகமான வீரர் போன்று அல்லாமல் அனுபவ வீரர் போல் செயல்பட்டு 36 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அசத்தினார். மேலும் அந்த போட்டியின் ஆட்ட நாயகன் பட்டத்தை பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். மேலும் அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியதாவது, இந்த போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களது திறமைகளை நிரூபித்து கொண்டுள்ளனர், இதில் எந்த ஒரு வீரரை தேர்ந்தெடுப்பது என்பது மிக கடினமான ஒரு விஷயம் ஆகும் .இருந்தபோதும் இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் நான் தேர்ந்தெடுத்த 15 பேர் கொண்ட அணியில் நிச்சயம் உள்ளனர்.

நிச்சயம் இந்த இரண்டு இளம் வீரர்களுக்கும் உலகக்கோப்பையில் வாய்ப்பு காத்திருக்கிறது; விவிஎஸ் லக்ஷ்மன் உறுதி !! !! 3

மேலும் இவர்கள் வருகிற டி20 உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் பங்கு பெறுவார்கள் என்று தனது ஆதரவை இரு வீரர்களுக்கும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 900 ரன்களை சேர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *