பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேக பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சாம்பியன் ட்ரோபி போட்டிகளில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேருகிறார்.
பாகிஸ்தான் அணியும் இந்தியா அணியும் கடந்த ஜூன் 4ஆம் தேதியில் 2017 சாம்பியன் ட்ரோபியில் தங்களது முதல் போட்டியில் விளையாடினர். இதில் வஹாப் ரியாஸ் 8.4 ஓவரை வீசி கொண்டு இருக்கும் போது அவரின் காலில் காயம் ஏற்பட்டது.
இந்த போட்டியில் அவர் மிகவும் மோசமாக பந்து வீசினார், வஹாப் ரியாஸ் 8.4 ஓவர்களில் 87 ரன்களை வழங்கியுள்ளார். இதுவே அவரின் ஐசிசி போட்டிகளில் மிகவும் மோசமான பந்து வீச்சாகும்.
காயம் ஏற்பட்டதால் அவர் பேட்டிங் செய்யவும் வரவில்லை,இதனால் வஹாப் ரியஸ்க்கு பதிலாக ஜுனைட் கான் தான் அடுத்த போட்டிகளில் இருந்து விளையாடுவர் என எதிர்பார்க்க படுகிறது.
பாகிஸ்தான் அணி தனது அடுத்த போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாட உள்ளது, முதல் போட்டியில் இந்திய அணியுடன் படுத்தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இடத்திலும் உள்ளது.
இந்திய அணி தங்களது இரண்டாவது போட்டியில் ஸ்ரீலங்கா அணியுடன் மோத உள்ளது.