வெறும் வாய்ச்சொல் வீரன் அல்ல! சொன்னதை செய்து காட்டிய விராட் கோலி! 1

வெறும் வாய்ச்சொல் வீரன் அல்ல சொன்னதை செய்து காட்டிய விராட் கோலி

மகேந்திர சிங் தோனி 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதும் அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் உலகத்தை கட்டியாளும் என்று கூறியிருந்தார். அவர் கூறியதுபோலவே தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் இந்திய அணி தான் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

2013 முதல் 2016 வரை ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணிகள்

வெறும் வாய்ச்சொல் வீரன் அல்ல! சொன்னதை செய்து காட்டிய விராட் கோலி! 2

2013 2014 2015 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியை வீழ்த்துவது அவ்வளவு கடினம் அந்த அளவுக்கு அந்த அணி அந்த மூன்று வருடங்களில் மற்ற அணிகளை கதிகலங்க வைத்தது.

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ஒரு புதிய வீரர்களை கொண்ட அணியை உருவாக்கி தென் ஆப்பிரிக்க அணிக்கு சவால் விடும் வகையில் மிக அற்புதமாக விளையாடி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் வந்து நின்றது.

2017 முதல் தற்போது வரை டெஸ்ட் கிரிக்கெட் உலகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இந்திய அணி

விராட் கோலி தலைமை ஏற்றவுடன் 2016 முதல் 2017ஆம் ஆண்டு வரை நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கிலும் அதிரடி அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 கணக்கில் இந்திய அணி கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. என் காரணமாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகள் பட்டியலில் முதல் இடத்தில் வந்தது.

India retain ICC Test Championship mace

2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் காரணமாக இந்திய அணி மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனை தக்க வைத்துக் கொண்டது. அதைப்போல 2018ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது, அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணி கைப்பற்றும் அதற்கு முன்பாக எந்த ஒரு ஆசிய அணியும் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று மிக்க வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்திய அணி நம்பர் ஒரு அணியாக புள்ளிப் பட்டியலில் நீடித்தது.

2020 ஆம் ஆண்டு அவ்வளவாக டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை. 2020-ம் ஆண்டு இறுதியில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெற்று அதன் பின்னர் இந்த வருடம் தொடக்கத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது என மீண்டும் தொடர் வெற்றிகளை குவித்த காரணத்தினால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி மீண்டும் நம்பர்-1 இடத்தை தக்கவைத்துள்ளது.

India retains ICC Test Championship mace, wins $1 million award for  finishing as No. 1 at the 1 April cut-off date

இதன் காரணமாக தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் இந்திய அணி தான் நம்பர் 1 டெஸ்ட் அணியாக விளங்கி வருகிறது. விராட் கோலி சொன்னது போல் செய்து காட்டிவிட்டார் என்று அனைத்து ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவரையும் அவரது அணியையும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி விளையாட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *