16 வயதில் 140கிமி வேகபந்தை மூக்கில் வாங்கினார் சச்சின்.. அதன்பின்னர் நடந்தது எல்லாம்....! 30 வருட ரகசியத்தை உடைத்த வக்கார் யூனீஸ் 1

சச்சின் தெண்டுல்கரை அறிமுக போட்டியில் ஆட்டமிழக்க செய்தபோது, கிரிக்கெட்டில் ஜாம்பவான் என பெயர் எடுப்பார் என்று நினைக்கவில்லை என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக சுமார் 24 வருடங்கள் விளையாடியவர் சச்சின் தெண்டுல்கர். ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவிப்பு, அதிக சதம், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என புகழப்படுகிறார்.16 வயதில் 140கிமி வேகபந்தை மூக்கில் வாங்கினார் சச்சின்.. அதன்பின்னர் நடந்தது எல்லாம்....! 30 வருட ரகசியத்தை உடைத்த வக்கார் யூனீஸ் 2

சச்சின் தெண்டுல்கர் தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக 1989-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் 15 ரன்கள் எடுத்த நிலையில் வக்கார் யூனிஸ் பந்தில் க்ளீன் போல்டானார். அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான சச்சின் தெண்டுல்கரை வக்கார் யூனிஸ் வீழ்த்தினார். இதில் சச்சின் 2-வது பந்திலேயே டக் அவுட் ஆனார்.16 வயதில் 140கிமி வேகபந்தை மூக்கில் வாங்கினார் சச்சின்.. அதன்பின்னர் நடந்தது எல்லாம்....! 30 வருட ரகசியத்தை உடைத்த வக்கார் யூனீஸ் 3

சச்சினை அவுட்டாக்கும்போது கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் பெயர் பதிப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘சச்சின் தெண்டுல்கர் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் இருந்து வந்ததால் ஒட்டுமொத்த அணியும் ஆர்வமாக இருந்தது. முச்சதம் அடித்த ஒரே மாணவன் சச்சின் தெண்டுல்கர்தான், பள்ளிக்கூட அளவில் முச்சதம் அடித்தவர் யார்?. பள்ளிக்கூட அளவில் சதம் அடித்தாலே பெரிய விஷயம் என்று பெருமைப்பட்டனர்.16 வயதில் 140கிமி வேகபந்தை மூக்கில் வாங்கினார் சச்சின்.. அதன்பின்னர் நடந்தது எல்லாம்....! 30 வருட ரகசியத்தை உடைத்த வக்கார் யூனீஸ் 4

சச்சசினை நான் முதல்முறையாக பார்க்கும்போது, தற்போது கிரேட் சச்சினாக விளங்கும் அவர், அப்போது என்னை ஈர்க்கும் அளவிற்கு இல்லை. விளையாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் பல வருடங்களாக அவர் செய்தவை அற்புதமானது. கிரிக்கெட்டில் இவ்வளவு பெயரை பதிப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், கடின உழைப்பு அவருக்கு இந்த பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

கராச்சியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவரை நான் மிக விரைவாக வீழ்த்தினேன். 15 ரன்கள் எடுத்தாலும் சில ஆன்-டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ்ஸ் ஷாட்டுகள் அற்புதமானது. அந்த தொடரில் அவர் மிகப்பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. ஆனால் சியால்கோட்டில் அரைசதம் அடித்ததை குறிப்பிட்டாக வேண்டும். ஏனென்றால், ஆடுகளம் பச்சை புற்களால் நிறைந்து இருந்தது.16 வயதில் 140கிமி வேகபந்தை மூக்கில் வாங்கினார் சச்சின்.. அதன்பின்னர் நடந்தது எல்லாம்....! 30 வருட ரகசியத்தை உடைத்த வக்கார் யூனீஸ் 5

நாங்கள் டெஸ்டில் முடிவு கிடைக்க வேண்டும் என்பதால் க்ரீன் ஆடுகளத்தை தயார் செய்தோம். சச்சின் களம் இறங்கியபோது மூக்கில் பந்து தாக்கியது. அப்போது அவருக்கு 16 வயது. இதனால் ஒருமாதிரியாக இருந்தார். ஆனால் உறுதியாக இருந்தார். அவருடன் சித்து பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இருவரும் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

அதன்பின் சச்சின் பேட்டிங் செய்ய தயாராகிவிட்டார். அதன்பின் அவருடைய கிளாஸ் பேட்டிங் மூலம் அரைசதம் அடித்தார். அப்போது ஏதோ சிறப்பான ஒன்றை செய்யப்போகிறார் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *