இந்திய அணியில் விளையாடுவதற்கு நாம் பொறுமையாக இருந்து ரன்களை குவித்தால் மட்டுமே போதுமென்று ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி (கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த போட்டி), மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது, இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது, இதில் இங்கிலாந்து அணி ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆடும் லெவனை இந்திய அணி வெளியிட்டுள்ளது. இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இடம் பெற்றிருக்கும் ஹனுமா விகாரி,தான் இந்திய அணியில் இடம் பெற்றது குறித்து விவரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், சிறப்பாக செயல்பட்ட போதும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் நான் இடம் பெறாமல் போனது எனக்கு வருத்தம் அளிக்கவில்லை, முதலில் நான் கொஞ்சம் நெருக்கடியாக உணர்ந்தேன், பிறகு இதுவெல்லாம் நம்முடைய கையில் கிடையாது என்பதை உணர்ந்து விட்டேன், மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய-A அணியில் இடம் பெற்று ரன்கள் அடித்து, அதன் மூலம் மீண்டும் இந்திய அணியில் என்னால் விளையாட முடிந்தது, இது மட்டும் தான் என்னால் செய்ய முடிந்தது, ரன்களை குவிக்க வேண்டும் என்பது மட்டுமே என்னால் முடிந்தது என்பதை உணர்ந்தேன், மேலும் நீண்ட காலமாகவே என்னால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை பின் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தேன், இதன் காரணமாக இந்திய அணியில் என்னால் விளையாட முடிந்தது, பொறுமையாக காத்திருந்தால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும், இதனால் நான் சில வருடங்கள் பொறுமையாக இருந்தேன் தற்பொழுது இந்திய அணியில் எனக்கான இடம் கிடைத்துள்ளது என்று ஹனுமா விகாரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ் (கேப்டன்).