ஏதாவது கத்துக்கணும்னா வா, இல்லைனா அப்டியே போய்டு - இந்திய வீரருக்கு அறிவுரை கூறிய வாசிம் அக்ரம்! 1

ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் மட்டும் என்னை அணுகு; இல்லை என்றால் அப்படியே சென்று விடு என்று வாசிம் அக்ரம் இந்திய வேகப்பந்து வீச்சாளரை பற்றி கூறியதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று தனது முழு திறமையை நிரூபித்ததால் இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடித்து உச்சம் செல்லலாம் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார் அர்ஷதிப் சிங். பஞ்சாப் அணியில் தொடர்ந்து பயணித்து வரும் அவர் துவக்க ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் அபாரமாக செயல்பட்டதால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆசியக் கோப்பை தொடரில் டெத் ஓவர்களில் இவர் மிகச்சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனாலும் போதிய அனுபவமின்மை காரணமாக வெற்றியை பெற்று தர முடியவில்லை. இருப்பினும் இளம் வீரர் தனது முதல் ஆண்டில் இத்தகைய சிறப்பான பங்களிப்பை கொடுத்ததால் டி20 உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தற்போது இவரைப் பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. இந்த தருணத்தில் அர்ஷதீப் சிங்கின் பயிற்சியாளர் ஆசிய கோப்பையில் நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

ஏதாவது கத்துக்கணும்னா வா, இல்லைனா அப்டியே போய்டு - இந்திய வீரருக்கு அறிவுரை கூறிய வாசிம் அக்ரம்! 2

அர்ஷதிப் சிங் தனது ரோல் மாடல் வாசிம் அக்ரமை ஆசிய கோப்பை தொடரின் போது சந்தித்திருக்கிறார். அப்போது வாசிம் அக்ரம் சில அறிவுரைகளை இவருக்கு கொடுத்ததாகவும் அதை நினைத்து பயம் கலந்த மகிழ்ச்சியில் அர்ஷதிப் சிங் இருந்ததாகவும் அவரின் பயிற்சியாளர் பகிர்ந்து கொண்டார்.

வாசிம் அக்ரம் அர்சதீப் சிங்கை சந்தித்தபோது, “சர்தார்ஜி, நீ நன்றாக பந்து வீசுகிறாய். உனது பந்துவீச்சு துல்லியமாக இருக்கிறது. அதை மேன்மேலும் வளர்த்துக்கொள். உனக்கு ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், என்னிடம் வா! நீ அனைத்தையும் கற்றுக் கொண்டாய்; எல்லாம் தெரிந்தவன் என்று நினைத்தால் என்னிடம் வராதே! அதுதான் உனக்கு நல்லது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.”

ஏதாவது கத்துக்கணும்னா வா, இல்லைனா அப்டியே போய்டு - இந்திய வீரருக்கு அறிவுரை கூறிய வாசிம் அக்ரம்! 3

இந்த அறிவுரையை நினைத்து அர்ஷதிப் சிங் இரவு ஹோட்டல் அறையில் இதை மட்டுமே யோசித்து இருந்திருக்கிறார். அதன் பிறகு அடுத்த நாள் கண்டிப்பாக அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்று அவரிடம் நேரடியாக கேட்டபோது, சில ஆலோசனைகளையும் வாசிம் அக்ரம் அவருக்கு கூறினார்.” என்று கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *