'டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியாவிலிருந்து மாற்ற  திட்டம் தீட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்' - கிரிக்கெட் வாரிய அதிகாரி பேட்டி ! 1

அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவிலிருந்து மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி வாசிம் கான் தெரிவித்திருக்கிறார்.

ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு 2021 இந்தியாவில் நடைபெற போகிறது. அடுத்த ஆண்டின் இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் 2022ம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற வேண்டிய டி-20 தொடரை ரத்து செய்யாமல் அப்படியே இந்தியாவில் நடத்த வேண்டும் என்று அறிவித்துவிட்டது சர்வதேச கிரிக்கெட் வாரியம். இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடர் இந்தியாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்திருக்கிறார்.

'டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியாவிலிருந்து மாற்ற  திட்டம் தீட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்' - கிரிக்கெட் வாரிய அதிகாரி பேட்டி ! 2

இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 தொடர் நடப்பது சந்தேகம் தான். அந்த தொடர் இந்தியாவில் நடைபெறுவதில் இன்னும் பல நிலையற்ற சூழ்நிலை இருக்கிறது என்று கருதுகிறேன். ஏனெனில் இந்தியாவில் இன்னும் கொரோனா வைரஸ் பரவி கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த விஷயத்தில் தற்போது வரை எந்த ஒரு தெளிவான முடிவும் இல்லை. ஏப்ரல் மாதத்தில் தான் இது குறித்து தெரியவரும் அதே நேரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உறவு சீராக இல்லாததன் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்தால் மிக நன்றாக இருக்கும். நிலவும் பதற்றம் காரணமாக இந்த இரு நாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடர் நடத்துவதற்குரிய சூழ்நிலையை சரியாக இல்லை. இதன் காரணமாகத்தான் இது போன்ற உத்தரவாதத்தை கேட்கிறோம் என்று கூறியிருக்கிறார் அந்த அதிகாரி.

'டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியாவிலிருந்து மாற்ற  திட்டம் தீட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்' - கிரிக்கெட் வாரிய அதிகாரி பேட்டி ! 3

இவர் கூறுவதை எல்லாம் வைத்துப் பார்த்தால் இந்தியாவில் கண்டிப்பாக உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கும் போதும் கூட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு ஒப்புக் கொள்ளாமல் முரண்டு பிடித்து வருவது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. இதன் காரணமாக எப்படியாவது இந்தியாவிலிருந்து டி20 உலக கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்யும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *