வாசிங்கடன் சுந்தர் அசத்தல், துலீப் ட்ராபியை தூக்கியது இந்தியா ரெட்!!

இந்தியா ரெட் மற்றும் இந்தியா ப்ளூ அணிகளுக்கு இடையிளான இறுதிப்போட்டி லக்னோவில் 25ஆம் தேதி முதல் 5 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த போடியில் கடைசி நாளான நேற்று இந்திய ரெட் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா ரெட் – இந்தியா ப்ளூ அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப் போட்டி லக்னோவில் பகல் – இரவு ஆட்டமாக கடந்த 25-ந்தேதி தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்தியா ரெட் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ப்ரித்வி ஷா (154), கேப்டன் தினேஷ் கார்த்திக் (111) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (88) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் 483 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ப்ளூ அணி 299 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் ஈஸ்வரன் (127), 7-வது வீரர் உனத்கட் (83) ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதிலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இந்தியா ரெட் அணி சார்பில் கோஹில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
184 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ரெட் அணி, சுழற்பந்து வீச்சில் திணறியது. தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 31 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த ஹெர்வாத்கர் (8), ஜக்கி (3), தினேஷ் கார்த்திக் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஆனால் பாபா இந்திரஜித் 59 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை அவுட்டாகாமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் இந்தியா ரெட் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 42 ரன்னுடனும், கவுல் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்றைய 4-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்தியா ரெட் அணி 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து 392 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் இந்தியா ப்ளூ அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
அந்த அணியின் மனோஜ் திவாரி (38), சுரேஷ் ரெய்னா (45), பார்கவ் பரத் (51) ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் இந்தியா ரெட் அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனால் அந்த அணி 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய ரெட் அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்தியா ரெட் அணி தரப்பில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆறு விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்கள் வீழ்த்தி, 130 ரன்கள் எடுத்த வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Editor:

This website uses cookies.