வீடியோ: உலககோப்பையை கையில் ஏந்த அசிங்கப்பட்ட இங்கிலாந்து கோச்!! கீழே போட்டுவிட்டு.. 1

உலகக் கோப்பையை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பெலிஸ் கையில் எந்த தயங்கி கீழே வைத்து நகர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்தது. லீக் சுற்றுகளின் முடிவில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

வீடியோ: உலககோப்பையை கையில் ஏந்த அசிங்கப்பட்ட இங்கிலாந்து கோச்!! கீழே போட்டுவிட்டு.. 2

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து, களமிறங்கி தட்டுத்தடுமாறி 241 ரன்கள் அடித்தது. அடுத்ததாக, ஆடிய இங்கிலாந்து அணியும் மிகவும் தடுமாறியது. விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறிய போது ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு ரன் சேர்த்தனர். இருப்பினும் பட்லர் கடைசி கட்டத்தில் ஆட்டமிழக்க, ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்பியது.

இறுதிவரை போராடிய ஸ்டோக்ஸ் அணியை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. ஆனால் ஸ்கோரை சமன் செய்தார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவர் வரை எடுத்துச் செல்லப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்தபோது, பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.

வீடியோ: உலககோப்பையை கையில் ஏந்த அசிங்கப்பட்ட இங்கிலாந்து கோச்!! கீழே போட்டுவிட்டு.. 3

இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தாலும், அனைவரின் வருத்தமும் நியூசிலாந்து அணி பக்கம்தான். ஏனெனில் அவர்கள் தோற்கடிக்கப்படவில்லை. ஐசிசி விதிமுறைகளால் கோப்பையை வெல்வதை புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

இங்கிலாந்து வீரர்கள் முதல் முறையாக கோப்பையை தூக்கிக்கொண்டு சந்தோச கழிப்பில் இருக்கும் நேரத்தில், வீரர்கள் சிலர் கோப்பையை பயிற்சியாளர் ட்ரெவர் பெலிஸ்-இடம் கொடுக்க முயற்சித்தனர். ஆனால், அவர் அதை வாங்க மறுத்தார். ஆனாலும் மீண்டும் கொடுத்தபோது, கோப்பையை தரையில் வைத்து நகர்ந்தார்.

இந்த சம்பவமே தெளிவாக கூறுகிறது. இங்கிலாந்து மட்டுமே கோப்பையை சொந்தம் கொண்டாட தகுதியானவர்கள் இல்லை. நியூசிலாந்து அணியின் இதற்கு தகுதியானவர்கள் என்று.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *