எனக்கு கடமை தான் முக்கியம்; வீட்டில் இருந்தே வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் இந்திய பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஸ்ரீதர், வீரர்கள் உடலை ‘பிட்’ஆக அப்படியே வைத்திருப்பதற்காக வீட்டில் இருந்தே பயிற்சி அளித்து வருகிறார்.

இந்தியா – தென்ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 12-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நடக்க இருந்தது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் லக்னோ, கொல்கத்தாவில் நடைபெற இருந்த ஆட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

View this post on Instagram

Stay indoors and stay fit. Our fielding coach @coach_rsridhar giving us major fitness goals from home 💪💪

A post shared by Team India (@indiancricketteam) on

அதன்பின் பிசிசிஐ அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் ரத்து செய்தது. இதனால் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களுடைய உடலை ‘பிட்’ஆக வைத்திருப்பதில் மற்ற அணி வீரர்களை விட மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டுள்ளதால் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் வீட்டில் இருந்தே வீரர்களுக்கு கற்றுக் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி வீரர்கள் தங்களுடைய வீட்டில் உடற்பயிற்சி மேற்கொள்வதை வீடியோ எடுத்து ஸ்ரீதருக்கு அனுப்பி வைக்கின்றனர். அதில் ஏதாவது சரிசெய்ய வேண்டுமென்றால் ஆலோசனை வழங்குகிறார். • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை தேர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....