வீடியோ; கொஞ்சம் கூட மூளையே இல்லையா உனக்கு..? இளம் வீரரிடம் ஆக்ரோஷமாக கத்திய ரோஹித் சர்மா
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியின் போது இந்திய அணியின் இளம் வீரரான நவ்தீப் சைனியை பார்த்து ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக கத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது டி.20 போட்டியில் இந்திய அணியும், கடைசி டி.20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும் வெற்றி பெற்றதால் மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி டி.20 போட்டியின் போது அதிகப்படியான ரன்களை வாரி வழங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியை பார்த்து, ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக கத்திய வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் புதிய கேப்டனான டி.காக் அரைசதம் அடித்து கைகொடுக்கவே தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
https://twitter.com/BattingAtDubai/status/1176469027218059264
இதில் டி.காக்கின் விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்த நிலையில், போட்டியின் 12 ஓவரை வீச வந்த நவ்தீப் சைனி அந்த ஓவரில் அதிகப்படியான ரன்களை வாரி வழங்கினார் இதனால் பொறுமை இழந்த ரோஹித் சர்மா “மூளைய யூஸ் பண்ணி பந்துவீசு” என நவ்தீப் சைனியை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ தான் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.