வீடியோ: விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா! 1

விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா!

விராட்கோலி சொன்ன சேலஞ்சை செய்து முடித்து, வீடியோ ஒன்றை அப்லோடியுள்ளார் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மாத இறுதியில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மார்ச் மாதம் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடரும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுவிட்டன. தற்போதுவரை மீண்டும் எப்போது ஐபிஎல் தொடர் நடக்கும் என தெரியவில்லை.

வீடியோ: விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா! 2
Yuzvendra Chahal was recently roasted by India skipper Virat Kohli and opener Rohit Sharma over his hilarious Tik Tok videos and now Chris Gayle as trolled the 29-year-old for the same.

ஊரடங்கினால் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் பயிற்சி முகாம்களை நடத்த மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக வீரர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க, வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி நேரலை மூலம் உரையாடி வருகின்றனர். மேலும் சில வீரர்கள் நல்ல உடல்தகுதியை தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள, வீட்டில் உரிய உடற்பயிற்சி செய்து அதனை வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

வீடியோ: விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா! 3

அந்த வீடியோ பதிவில் இன்னும் சில வீரர்களை டேக் செய்து அவர்களையும் செய்யவைத்து வீடியோ அப்லோட் பண்ணுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக, இதுபோன்ற உடற்பயிற்சி தொடர்பான  வீடியோக்களை அப்லோடு செய்வதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த குறிப்பிட்ட வீடியோவுக்கு, “உடற்பயிற்சியை இப்படியும் செய்யலாம் முயற்சித்து பாருங்கள்” என பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஹர்திக் பாண்டியாவை டேக் செய்திருந்தார்.

விராட் கோலியின் இந்த கோரிக்கையை ஏற்ற பாண்டியா தனது மனைவியின் முன்னிலையில் வித்தியாசமான உடற்பயிற்சியை செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *