ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கான விருந்து

0
287

ஹர்திக் பாண்ட்யா தனது பொழுது போக்கு, பிடித்தது, பிடித்தவர்கள் மற்றும் கிரிக்கெட்டில் அவருடன் ஒட்டிய நீக்கமுடியா நினைவுகள் ஆகியவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் பகுதி இது.

பல நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு இந்தியாவிற்கு கிடைத்த பெரும் பொக்கிசம் ஆவார் உலகத்தரம் வாய்ந்தவர்  ஆல்  ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.

குஜராத் மாநிலம் பரோடாவில் பிறந்து வளர்ந்த திறமைக்காரர் ஹர்திக் பாண்ட்யா, ஐபிஎல் தொடரில் பெயர் பெற்ற பந்து வீச்சாளர்களை எல்லாம் துவம்சம் செய்து கொண்டிருந்த அவர் அந்த ஆட்டத்திறத்தை அப்படியே சர்வதேச கிரிக்கெட்டிலும் கொண்டு வந்து சேர்த்து, இந்தியாவின் நீண்ட நாள் கனவான வேகப்பந்து வீசக்கூடிய ஆல் ரவுண்டர் கனவை நனவாக்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.

23 வயதே ஆன  பாண்ட்யா தொடர்ந்து 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர். ஐபிஎல் இல் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா, அந்த அணி கோப்பையை வெல்ல பல அரிய பங்களிப்புகள் செய்துள்ளார்.

கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து ஆடிய போது தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 6 பந்தில் 20 அடித்து இந்தியா நல்ல இலக்கு எடுக்க உதவினார். அந்த அதிரடி ஆட்டத்தில் தொடர்ந்து 3 சிக்சர்கள் பறக்க விட்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது அதிரடியை உலகத்திற்கு காட்டினார். அந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

அதே போன்று சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து ஆடிய போதும் தனக்கே உரிய பாணியில் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த பாண்ட்யா வெறும் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். அந்த ஆட்டத்தில் வெறும் 32 பந்துகளில் அரை சதம் கடந்த பாண்ட்யா, ஐசிசி நடத்தும் அனைத்துலக சர்வதேச தொடரில் அதிவேக அரைசதம் விளாசியதுடன் முன்னதாக கில்கிறிஸ்ட் 33 பந்துகளில் அரை சதம் கடந்த சாதனையும் முறியடித்தார்.

அந்த போட்டியில் ஏழாவதாக பாண்ட்யா களம் இறங்கிய போது இந்தியா அணியின் ஸகோர் 54/5 என இருந்தது. இறங்கிய உடன் அணியை கரை சேர்க்கும் பொறுப்பை ஏற்ற பாண்ட்யா தனது அதிரடியால் பாகிஸ்தான் பந்து வீச்சை சின்னா பின்ன மாக்கி கொண்டு இருந்தார். துரதிர்ஷ்டவசமாக ஜடேஜா செய்த வேலையினால் பாண்ட்யா ரன் அவுட் ஆனதும், இந்தியாவை கரை சேர்க்கும் அவரது முயற்சி வீணாககப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

தற்போது பாண்ட்யாவின் விருப்பு வெருப்புகளை காண்போம்.

பிடித்த மைதானம்?  : வான்கடே ஸ்டேடியம்,மும்பை

பிடித்த கிரிக்கெட் ஷாட்? : ஸ்ட்ரெய்ட் ஃட்ரைவ்

நீங்காத கிரிக்கெட் சார்ந்த நினைவு? : கண்டிப்பாக  பங்களாதேசுடன் 2016 இருபது ஓவர் உலகக்கோப்பையில் வென்றது.

எதற்கு முக்கியத்துவம், புத்தகம் படிக்க அல்லது படம் பார்க்க? : படம் பார்க்க

நீங்கள் பாட்டு பாடுவீர்களா?  : நான் அவ்வளவு நல்ல பாடகன் இல்லை

பிடித்த மொபைல் செயலி? : வாட்சப்

பிடித்த சினிமா நடிகை?  : தீபிகா படுகோன்

உங்கள் பெயரை மாற்ற வாய்ப்பு கிடைத்தால் என்ன பெயர் வைப்பீர்கள்? : என் பெயரை மாற்ற நான் முற்பட மாட்டேன்.

பாண்ட்யாவின் நேர்காணல் கீழே உள்ள இணைப்பில் :

SHARE
Just a normal human being with some passion on Cricket. And am a Civil Engineer, YouTuber, Freelancer, Former Junior Engineer Govt.Of India, UPSC Aspirant.